சென்னை: நடிகர் ஷாருக்கானின் ‘பதான்’ படத்திற்கு தமிழ்நாட்டில் பிரம்மாண்டமான கட்-அவுட்கள் வைத்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘பதான்’ திரைப்படம் வரும் ஜனவரி 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ள இப்படத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யாஷ் ராஜ் தயாரிப்பு நிறுவனத்தின் 50-வது படமாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. அண்மையில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லரின் தமிழ் பதிப்பை நடிகர் விஜய் வெளியிட்டிருந்தார். அதற்காக நடிகர் விஜய்க்கு, ஷாருக்கான் நன்றியும் தெரிவித்திருந்தார்.