Vijay Celebrated The Success Of Varisu In A Easy Means Success Met Pictures Going Viral

நடிகர் விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடந்த 11ம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களையே படம் பெற்று இருந்தாலும், ரசிர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. உலகம் முழுவதும் வசூலிலும் சக்கை போடு போட்டு வருகிறது. இந்நிலையில், வாரிசு திரைப்படத்தின் வெற்றியை அப்படத்தில் பணியாற்றிய படக்குழுவினருடன் சேர்ந்து, ஐதராபாத்தில் நடிகர் விஜய் கொண்டாடியுள்ளார்.

வாரிசு வெற்றிக்கொண்டாட்டம்:

தனியார் கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நடிகர் விஜய், தயாரிப்பாளர் தில் ராஜு, இயக்குனர் வம்சி மற்றும் இசையமைப்பாளர் தமன் ஆகியோருடன், சக நடிகர்கள் ஷ்யாம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். தளபதி விஜய் மற்றும்  வாரிசு என குறிப்பிட்ட கேக்கை வெட்டி, ஒருவருக்கு ஒருவர் ஊட்டிக்கொண்டனர். பின்பு அனைவரும் சேர்ந்து புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

200 கோடியை கடந்த ”வாரிசு”

வாரிசு படம் வெளியாகி சில நாட்கள் ஆன நிலையில்,  அப்படத்தின் வசூல் குறித்த விவரங்களை தினமும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ், அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதன்படி,  உலகமெங்கும் முதல் வாரத்தில்  210 கோடி ரூபாயை வாரிசு படம் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

முதல் மூன்று நாட்களின் வசூலில், வாரிசு படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் துணிவை விட குறைவாக இருந்து வந்தது. தமிழ்நாடு அளவில் வாரிசு, துணிவை விட குறைந்த அளவில் வசூல் செய்து இருந்தாலும், உலகளவில் வாரிசு, துணிவு வசூலை வீழ்த்தியுள்ளது. துணிவு தமிழ் நாட்டில் வெற்றிநடை போட, ரெட் ஜெயண்ட் நிறுவனமும் தியேட்டர் உரிமையாளர்களும்தான் காரணம் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வாரிசு படக்குழுவினர்

வம்சி பைடிபள்ளி இயக்கிய இப்படத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்க, ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் சரத்குமார், ஷாம், பிரபு, சங்கீதா, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சம்யுக்தா, பிரபு, பிரகாஷ்ராஜ், எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்த நிலையில் தமன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 

தளபதி 67:

வாரிசு படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து வருகிறார். ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில், மிஷ்கின் நடிப்பது உறுதியாகியுள்ளது. அதோடு, திரிஷா, கவுதம் மேனன் மற்றும் சஞ்சய் தத் என பல்வேறு திரைநட்சத்திரங்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பெரும் வெற்றி பெற்ற நிலையில், அவர்கள் மீண்டும் இணைந்துள்ள தளபதி-67 படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. அதேநேரம், படப்பிடிப்பு தொடங்கிய பிறகும் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,755FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles