தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் 'கேப்டன் மில்லர்'. நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். இவர்களுடன் ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், குமரவேல், டேனியல் பாலாஜி, மூர், நாசர், விஜி சந்திரசேகர், சுவயம்சிதா தாஸ், பிந்து, அருணோதயன், "மேற்குத் தொடர்ச்சி மலை" ஆண்டனி, பால சரவணன் மற்றும் சில முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.