Share Market Opened At the moment January 20 Share Market Replace Sensex Nifty Factors

Share Market opened : வாரத்தின் இறுதி நாளான இன்று, இந்திய பங்குச்சந்தையானது சரிவில் தொடங்கியுள்ளது.

மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 35.69 புள்ளிகள் குறைந்து 60,822.74 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 9.80 புள்ளிகள் குறைந்து 18,098.05 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது. இந்த வாரத்தில் இரண்டாவது நாளாக இந்திய பங்குச்சந்தையானது சரிவில் தொடங்கியதால் முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

லாபம்-நஷ்டம்

பவர் கிரிட் கார்ப், ஐசிஐசிஐ வங்கி, டாடா மோட்டார்ஸ், எஸ்பிஐ, டிசிஎஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், இன்போசிஸ், விப்ரோ, எச்சிஎல் டெக், லார்சன், கிராசிம், பாரதி ஏர்டெல், எச்டிஎஃப்சி வங்கி, கோல் இந்தியா, டாடா ஸ்டீல், என்டிபிசி, ஆக்சிஸ் வங்கி, டெக் மகேந்திரா, கோடக் மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன

ஏசியன் பெயின்ட்ஸ், சன் பார்மா, ரிலையன்ஸ், டெட்டன் கம்பெணி, பஜாஜ் ஆட்டோ, ஐடிசி, ஹிரோ மோட்டோகோர்ப், நெஸ்டீலே, ஐடிசி, பிரிட்டானியா, எம்எம், யுபிஎல், ஓஎன்ஜிசி, அப்போலோ மருத்துவமனை உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.

இந்த வாரத்தில் முதல்  மூன்று நாட்கள் இந்திய பங்குச்சந்தையானது முதலீட்டாளர்களை ஆறுதல் படுத்தும்படி ஏற்றத்தில் இருந்தது. ஆனால் தொடர்ந்து இரண்டாவது நாளாக பங்குச்சந்தை சரிவில் தொடங்கியுள்ளது. இது முதலீட்டாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய வங்கிகளானது தொடர்ந்து வட்டி விகிதத்தை அதிகரித்து வருகின்றன. ரஷ்யா-உக்ரைன் போர் 11 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், இதுவும் பங்குச்சந்தைகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இதுமட்டுமின்றி, சீனா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தாக்கமானது அதிகரித்து வருகிறது.  இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. உலகின் 2-வது மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட சீனாவில் கொரோனா அதிகரித்து வருவதால், முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியுள்ளது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,681FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles