Hansika Motwani Seems Fascinating In Her Marriage ceremony Documentary Hansika Love Shaadi Drama First Look Revealed | ஹன்சிகா

நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடியைப் போல் நடிகை ஹன்சிகாவின் திருமண வீடியோவும் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாக்களில் பிரபல நடிகையாக விளங்கும் ஹன்சிகா மோத்வானி தனது நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னருமான சோஹைல் கதுரியாவை கடந்த டிசம்பர் 4ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில்  இவர்கள் திருமணம் நடைபெற்ற நிலையில், கோலாகலமாக நடைபெற்ற இவர்களின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி அவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வந்தன.

இந்நிலையில், ஹன்சிகாவின் காதல் ததும்பும் க்யூட்டான திருமண நிகழ்வுகள் விரைவில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் விரைவில் வெளியாக உள்ளது. ‘ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் ஷோவாக வெளியாக உள்ளது.

நடிகை  ஹன்சிகா, சோஹேலுடன் தனது திருமண வாழ்க்கையை தொடரப் போவதற்கான முடிவை எடுத்த தருணம் முதல் இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்தது வரை, திருமண திட்டமிடுபவர்கள் தொடங்கி, வடிவமைப்பாளர்கள், குடும்பத்தினர் என அனைவரையும் உள்ளடக்கிய அற்புதமான கதைகள் அடங்கிய ஒரு நிகழ்ச்சியாக இந்த ஷோ இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ள நிலையில், விரைவில் இந்நிகழ்ச்சி வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


முன்னதாக 2016 ஆம் ஆண்டு கோவாவில் ரிங்கி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில், அந்த திருமண நிகழ்ச்சியில் ஹன்சிகா பங்கேற்ற வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில் ஹன்சிகாவின் திருமண சர்ச்சைகளுக்கு இந்த நிகழ்ச்சி முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,757FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles