15 Yr Previous Lady Shot Lifeless For Rejecting Love Proposal In Uttarpradesh | Crime: ஒருதலைக் காதலால் பயங்கரம்; காதலிக்க மறுத்த சிறுமி துப்பாக்கியால் சுட்டுக்கொலை

ஒருதலைக் காதலால் பயங்கரம்

உத்தர பிரதேச மாநிலம் பதோஹி என்ற பகுதியில் நேற்று 15 வயது சிறுமி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் அனுராதா பிந்த் என அடையாளம் காணப்பட்டது. நேற்று மாலை சிறுமி தனது கோதரி நிஷாவுடன் பயிற்சி நிறுவனத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்ததார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் அரவிந்த் விஸ்வகர்மா (22) என்பவர் அந்த சிறுமியின் தலையில் சுட்டுவிட்டு அந்த இடத்தில் இருந்து தப்பியோடினார். பின்பு, ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தின் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள இளைஞரை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.

ஒரு தலைக்காதல்:

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “குற்றம் சாட்டப்பட்டவர் அந்த சிறுமியை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த சிறுமி உன்னை எனக்கு பிடிக்கவில்லை. தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று பலமுறை கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சிறுமியின் தலையில் சுட்டுக் கொலை செய்துள்ளார். மேலும் தலைமறைவாக உள்ள அந்த இளைஞரை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தனர்.

மற்றொரு சம்பவம்

சில நாட்கள் முன்பு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு மாவட்டம் ராஜனகுண்டேயில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.டெக் படித்து வந்தவர் லயசிதா (19). பெங்களூரு நிருபதுங்கா ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.டெக் படித்து வருபவர் பவன் கல்யாண். இவர் லயசிதாவை பார்க்க அவரது கல்லூரிக்கு வந்திருந்தார்.  

இதனை அடுத்து, கல்லூரி வளாகத்தில் இரண்டு பேரும் பேசிக் கொண்டிருந்தனர்.  அப்போது பவன் கல்யாண் மற்றும் லயசிதா இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திடீரென ஆத்திரமடைந்த பவன் கல்யான், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் லயசிதாவை சராமாரியாக குத்தி உள்ளார்.  இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பின்னர், அதே இடத்திலேயே பவன் கல்யாண் தன்னை தானே குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.பின்பு, பவன் கல்யாணை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற் கட்ட விசாரணையில், மாணவியிடம் பவன் கல்யாண் தனது காதலை தெரிவித்துள்ளார். இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பவன் கல்யாண் சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்று கத்தியால் குத்தி மாணவியை கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,754FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles