“நிலைமை தற்போது கைமீறிவிட்டது” – திரைப்படங்கள் குறித்த மோடியின் கருத்துக்கு அனுராக் காஷ்யப் பதில் | Anurag Kashyap reacts to PM Narendra Modis warning towards movies

பாஜகவினர் தங்களுக்கு தொடர்பில்லாத விஷயங்களில் கருத்து தெரிவிக்க வேண்டாம் என பிரதமர் மோடி அறிவுறுத்தியது குறித்து பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பேசிய மோடி, ‘சினிமா போன்ற தொடர்பில்லாத விஷயங்களில் தேவையற்ற கருத்துகள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும்’ என்று பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் தலைவர்களுக்கு அறிவுறுத்தியிருப்பதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது. திரைப்படங்களுக்கு எதிரான ‘பாய்காட்’ ட்ரெண்ட் குறித்தும் அவர் பேசியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், ‘நிலைமை கை மீறி சென்றுவிட்டது’ என கூறியுள்ளார். ‘ஆல்மோஸ்ட் பியார் வித் டிஜே மொஹப்பத்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் அனுராக் காஷ்யப் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் மோடியின் இந்த அறிவுறுத்தல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்தவர், “இதையே அவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருந்தால் மாற்றம் ஏற்பட்டிருக்கும். இப்போது அவரது கருத்தால் மாற்றம் ஏற்படும் என நான் நினைக்கவில்லை. தற்போது நிலைமை கைமீறி போய்விட்டது. யாரும் யாருடைய பேச்சையும் கேட்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் அமைதியாக இருந்து முன்முடிவுகளையும், வெறுப்பையும் ஊக்கப்படுத்தியதால் விளைந்த கூட்டம் ஒன்று தற்போது சக்திவாய்ந்ததாக மாறியுள்ளது” என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,681FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles