தந்தையின் பிறந்தநாளில் அனிதா வெளியிட்ட உருக்கமான பதிவு
18 ஜன, 2023 – 11:34 IST
பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ஆர்.சி.சம்பத் கடந்த 2020ம் ஆண்டு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மகள் தான் பிக்பாஸ் புகழ் அனிதா சம்பத். அப்பாவை போலவே அனிதாவும் செய்தியாளராக, செய்திவாசிப்பாளராக ஊடகத்தில் பணியை தொடங்கி பின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குபின் இன்று நடிகையாகவும் வலம் வருகிறார். இந்நிலையில் ஜனவரி 16ல் ஆர்.சி.சம்பத்தின் பிறந்தநாள். இதனைமுன்னிட்டு அப்பாவை நினைத்து மிக உருக்கமான பதிவொன்றை அனிதா பதிவு செய்திருந்தார். அதில், ‘உங்கள பெத்தவங்க இருக்கும் போதே அவங்கள கொண்டாடுங்க. நல்லா பாத்துக்கோங்க’ என அன்பான வேண்டுகோளும் வைத்துள்ளார். இதனையடுத்து தந்தையை நினைத்து நெகிழ்ந்து உருகிக் கொண்டிருக்கும் அனிதாவுக்கு பலரும் ஆறுதலையும், அன்பையும் தெரிவித்துள்ளனர்.
Commercial

வரவிருக்கும் படங்கள் !

- மாயன்
- நடிகர் : வினோத் மோகன்
- நடிகை : பிந்து மாதவி
- இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

- தேவதாஸ்
- நடிகர் : உமாபதி
- நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
- இயக்குனர் :மகேஷ்.ரா

- தமிழரசன்
- நடிகர் : விஜய் ஆண்டனி
- நடிகை : ரம்யா நம்பீசன்
- இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்

- எங் மங் சங்
- நடிகர் : பிரபுதேவா
- நடிகை : லட்சுமி மேனன்
- இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
Tweets @TamilFunZonecinema