மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம், நேற்று டெல்லியில் தொடங்கியது. புதுடெல்லி மாநகராட்சி கவுன்சில் கூட்ட மண்டபத்தில், இந்த செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில், பிரதமர் மோடி, பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய நிதி அமைச்சர் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பாஜக செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நடப்பாண்டில் 9 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் மற்றும் பாஜகவின் புதிய தேசிய தலைவரை தேர்ந்து எடுப்பது போன்ற பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இந்த, செயற்குழு கூட்டட்தில் ஆலோசிக்கப்பட்டது. அதன் முடிவில், பாஜகவின் தேசிய தலைவராக உள்ள ஜே.பி. நட்டாவின் பதவிக்காலத்தை 2024ம் ஆண்டு ஜுன் மாதம் வரை நீட்டிக்க, செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் அமித் ஷா அறிவித்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் பாஜகவின் தேசிய தலைவராக பொறுப்பேற்ற நாட்டாவின் பதவிக்காலம், இன்னும் இரண்டு மாதங்களில் நிறைவடைய இருந்த நிலையில், அவரது பதவிக்காலம் 2024ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
The tenure of JP Nadda as nationwide president of the Bharatiya Janata Occasion has been prolonged until June 2024: BJP chief and Union minister Amit Shah pic.twitter.com/lxS7glDL2K
— ANI (@ANI) January 17, 2023
முன்னதாக தேசிய செயற்குழு கூட்டத்தில் பேசிய ஜேபி நட்டா, “இந்த ஆண்டு 9 மாநில சட்டசபை தேர்தல்களை கட்சி எதிர்கொள்கிறது. இவற்றில் ஒரு மாநிலத்தைக்கூட பாஜக இழந்து விடக்கூடாது” என குறிப்பிட்டார்.