Netflix Says Chilla Chilla After Grabbing OTT Rights Of AK 62 Film

வலிமை பட தோல்விக்குப் பிறகு அஜித்-போனி கபூர்-ஹெச்.வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளியான ‘துணிவு’ படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து கலக்கல் ஹிட் அடித்துள்ளது.

வசூலிலும் துணிவு படம் சாதனைகள் படைத்து வரும் நிலையில், அடுத்ததாக அஜித் -விக்னேஷ் சிவன் இணையும் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

’ஏகே 62’ என அழைக்கப்படும் இத்திரைப்படத்தை சுபாஸ்கரனின் லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.அனிருத் இசையமைக்கிறார். இப்படம் காமெடியுடன் கூடிய திரில்லர் பாணி கதையாக இருக்கும் எனக் கூறப்படும் நிலையில்,  அரவிந்த் சாமி, சந்தானம், அர்ஜுன் தாஸ் எனப் பல முன்னணி நடிகர்கள் அஜித்துடன் இப்படத்தில் இணைவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படத்தின் படப்பிடிப்பு நாளை (ஜன.17) தொடங்கும் எனக் கூறப்படும் நிலையில், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் தளம் வாங்கி தன்வசப்படுத்தியுள்ளது.

இது குறித்து முன்னதாக தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நெட்ஃப்ளிக்ஸ் இந்தியா சவுத், ”நாங்கள் சில்லா சில்லாவாக இருக்க முயன்றோம் ஆனால் முடியவில்லை.

தியேட்டர் ரிலீசுக்குப் பின் ஏகே 62 படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும்” என மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளது. 

 

’நெட்ஃப்ளிக்ஸ்ல என்ன ஸ்பெஷல்’, ’நெட்ஃப்ளிஸ் பண்டிகை’ ஆகிய ஹேஷ் டேகுகள் உடன் இந்தப் பதிவைப் பகிர்ந்து நெட்ஃப்ளிக்ஸ் தன் குஷியை வெளிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் துணிவு படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் துணிவு பட கெட் அப்பில் நடிகர் அஜித்துக்கு அவரது ரசிகர்கள் சிலை வைத்து உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.

திருநெல்வேலி அஜித் ரசிகர்கள் இணைந்து உருவாக்கியுள்ள இந்த சிலை, நேற்று சென்னை ரோஹினி திரையரங்கில் காட்சிக்காக வைக்கப்பட்டது.

ரசிகர்கள் உற்சாகம்:

 தொடர்ந்து இந்த சிலை இன்று அம்பத்தூர் ராக்கி சினிமாஸில் வைக்கப்படும் என்றும் ரசிகர்கள் சென்று புகைப்படங்கள் செல்ஃபிக்கள் எடுத்து மகிழும்படியும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரி வருகின்றனர்.

நேற்று முதல் பொங்கல் விடுமுறைகள் தொடங்கியுள்ள நிலையில் துணிவு பட பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன் இன்னும் பன்மடங்கு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,755FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles