மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடா என தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகையான மம்தா மோகன்தாஸ் தனக்கு விட்டிலிகோ என்ற ஆட்டோஇம்யூன் நோய் பாதிக்கப்பட்டிருக்கிறது என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.
அண்மையில் இதே போன்று மயோசிடிஸ் என்ற ஆட்டோஇம்யூன் நோயால் பாதிக்கப்பட்டதாக அறிவித்திருந்த நடிகை சமந்தா தற்போது அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார். அவரைத் தொடர்ந்து தற்போது மம்தா மோகன்தாஸூம் தனக்கு இருக்கும் நோய் பாதிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
View this submit on Instagram
ஏற்கெனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த மம்தா அதில் இருந்து குணமாகி வந்த நிலையில் தற்போது விட்டிலிகோ என்ற நிறமிழப்பை உண்டாக்கும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை தெரிவித்திருக்கிறார். இது தொடர்பான அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அழகையும் நிறத்தையும் இழந்து வருவதாக பதிவிட்டிருக்கிறார்.
அதில், “முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது உங்களது அன்பை கேட்டுக் கொள்கிறேன். அவை கண்டுபிடிக்கப்பட்டன. என்னுடைய நிறத்தை இழந்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் காணும் கதிரை என்னுடைய மூடுபனி வழியாக காண ஒவ்வொரு நாளும் எழுகிறேன். உங்களிடம் உள்ளவற்றை கொடுங்கள். அந்த அருளால் என்றென்றும் கடன்பட்டவளாக இருப்பேன்.” எனக் குறிப்பிட்டு, #colour #autoimmunedisease #autoimmune #vitiligo #faceit #fightit #embrace #newjourney ஆகிய ஹேஷ்டேக்களையும் பதிவிட்டிருக்கிறார் மம்தா மோகன்தாஸ்.
View this submit on Instagram
தொற்றுநோயா விட்டிலிகோ?
அரிதான சரும குறைபாடுதான் (pores and skin dysfunction) இந்த விட்டிலிகோ வர காரணம். இதனால் தோல் வெள்ளை நிற திட்டுகளாக மாறும். அதாவது இயற்கையாக இருக்கும் சருமம் எந்த நிறத்தில் இருந்தாலும் விட்டிலிகோவால் பாதிக்கப்பட்டால் வெள்ளை நிற திட்டுகளாக மாறும். இந்த வகை சரும பாதிப்பால் குறைந்த அளவிலான மக்களே பாதிக்கப்படுகிறார்கள் என சருமநோய் நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.
நீங்கள் வளர வளர, சருமத்தில் உள்ள திட்டுகள் அதிகரிக்கும் போதுதான் விட்டிலிகோ உருவாகும். இதனை Progressive Situation என்கிறார்கள். விட்டிலிகோவால் பாதிக்கப்பட்டவர்களை தொட்டாலோ, அருகே நின்றாலோ அதனால் எந்த பாதிப்பும் வராது என்றும் மற்றவர்களுக்கு பரவக் கூடியதல்ல என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
விட்டிலிகோவிற்கு தீர்வுதான் என்ன?
மெலனோசைட்ஸ் என்பதன் பற்றாக்குறையால் வரும் இந்த தோல் நோயை குணப்படுத்துவதற்கு என நிரந்த சிகிச்சை எதுவும் இல்லை. இருப்பினும் விட்டிலிகோவால் ஏற்படும் நிறமாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான முறைகள் மருத்துவத்தில் இருக்கின்றன. சூரிய ஒளியில் இருந்து கட்டுப்பாடாக இருப்பதன் மூலம் நிறமாற்றம் மற்றும் அதனால் ஏற்படும் தோல் சேதத்தைத் தடுக்க மிகவும் பயனுள்ள வழியாக இருக்கும் என கூறப்பட்டிருக்கிறது.
மேலும், கார்டிகோ ஸ்டீராய்டுகள், கால்சினியூரின் தடுப்பான்கள், ஒளிக்கதிர் சிகிச்சை (phototherapy) மற்றும் தோல் ஒட்டுதல் (pores and skin grafting) ஆகியவை பாதிக்கப்பட்ட பகுதிகளில் சில நிறமிகளை மீட்டெடுக்க உதவும்.
Supply : WWW.TAMILFUNZONE.COM