Skincare Routine In Winter : குளிர்கால சரும பராமரிப்பு குறித்து கவலையா? கற்றாழை இருக்க பயமேன்!

கற்றாழை ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இன்று கற்றாழை லேபிள் இல்லாத செயற்கை முறையிலான அழகு சாதனப்பொருட்களை காண முடியாது. கற்றாழை ஷாம்பு, கற்றாழை மாய்சரைஸர் ஆகிவைகள் நிறைய கிடைக்கின்றன. இருந்தாலும், இயற்கையாக கிடைக்கும் கற்றாழை எவ்வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. அதிலிருக்கும் பலன்கள் முழுவதுமாக கிடைக்கும்.

இதில் உள்ள சிறப்பு குணங்கள் காரணமாக பல்வேறு உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு இது நல்ல தீர்வாக இருக்கிறது. தீக்காயம், குடல்புண், சருமம் சார்ந்த பிரச்சனைகள், தலை முடி வளர என உள்ளிட்ட பலவற்றிற்கு இதைப் பயன்படுத்தலாம். இதன் பயன்பாடு பட்டியல் நீளும்.

அன்றைக்கு வீட்டு வைத்தியத்தில் இடம்பெற்ற ஒரு மருத்துவக் குணமுள்ள குறுச்செடி, இன்றைக்கு பெரிய லாபம் ஈட்டும் வியாபார பொருளாகிவிட்டது. கற்றாழைச் செடி கிடைக்காதாவர்கள், அதிலிருந்து உணவு தயாரிக்க நேரம் இல்லாதவர்கள் கடைகளில் இருக்கும் க்ரீம்கள், கற்றாழை ஜூஸ் ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர்.

<sturdy>கற்றாழையில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் மற்றும் அதன் பயன்கள்:</sturdy>

கற்றாழையில் கால்சியம், குளோரின், சோடியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ,பி1,பி2 போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் கற்றாழையில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்புப்பண்புகள் அதிகளவில் உள்ளதால் இதனை தோல் அழற்சி மற்றும் முடி பராமரிப்பு போன்றவற்றிற்கு நல்ல தீர்வாக அமைந்துள்ளது.

கற்றாழை சருமத்தின் ஈரப்பதத்தை பாதுகாக்க உதவுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை மீட்டெடுக்க பெரிதும் உதவுகிறது. கற்றாழையை  சிறந்த க்ளன்ஸாராக பயன்படுத்தலாம்.

கடைகளில் கிடைக்கும் கற்றாழை ஜெல்லை பயன்படுத்தலாம். ஆனால், அவை முழு பயனை தராது. ஷெல்ப் டைன் என்று சொல்லப்படும், அது நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்கு இரசாயனங்கள் கலக்கப்பட்டிருக்கும். இதனால் உடலில் பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதற்கு பதிலாக, வீட்டில் சின்ன தொட்டியில் கற்றாழை செடியை வைத்துக்கொண்டால் இயற்கை ஜெல் கிடைக்கும்.

உங்களுக்கு தேவைப்படும்போது, ஒரு கற்றாழை மடலை எடுத்து, தோல் நீக்கி, அதிலிருக்கும் ஜெல்லை எடுத்து முகம், கை, கால்களில் தேய்த்து கொள்ளலாம். தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும் இது நன்கு உதவும்.

கற்றாழை ஜெல்லை ஐஸ் டிரேயில் மாற்றி,அதை ஃபிரிட்ஜிட் வைத்து விடலாம். பின்னர், கற்றாழை ஐஸ் கட்டிகளை முகத்திற்கு பயன்படுத்தலாம். இதோடு பன்னீரும் சேர்த்துகொள்ளலாம்.

<sturdy>கற்றாழையின் பயன்கள்:</sturdy>

கற்றாழை வெப்பத்தைத் தணிக்கும்.

இது உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் இருக்கிறது.

கற்றாழை குடல் சுவர்களை புண்களிலிருந்து பாதுகாக்கிறது.

கற்றாழையை சாப்பிடுவது உடல் செல்களின் நலனைப் பாதுக்காக்கிறது.

கற்றாழையில் உள்ள ஆண்டி ஆசிட்னஸ் உடலுக்கு நன்மை தருபவை.

மூட்டுவலி, வாய் ஆரோக்கியத்திற்கு கற்றாழை சிறந்தது.

சத்துமிக்க கற்றாழையைச் சாப்பிட்டால் சருமம் ஆரோக்கியமுடன் இருக்கும்.

கற்றாழை ஜூஸ், குழம்பு உள்ளிட்டவைகளையும் செய்து சாப்பிடலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,757FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles