காதல் ஒரு பைத்தியகாரத்தனம். காதலிக்காக காதலனும், காதலனுக்கு காதலியும் எந்த எல்லைக்கும் சென்றும், தங்கள் காதல் எல்லைகள் அற்றது என்று நிரூபணம் செய்வர். தொடர்ந்து, நாடு கடந்த காதல், ஆன்லைன் மூலம் காதல் என நாளடைவில் காதலர்கள் இணைவதை தினமும் காது குளிர கேட்டு வருகிறோம்.
அந்த வகையில், கடந்த ஜனவரி 2ம் தேதி லண்டனில் இருந்து ஹைதராபாத் வழியாக மும்பை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் தான் திருமணம் செய்யபோகும் பெண்ணிடம் ஒரு நபர் தனது காதலை வெளிபடுத்தியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.
Marriage Proposal Made in Heaven
Love is within the Air
Wedding ceremony bells had been ringing for a pair onboard an #AirIndia flight to #Mumbai when a person bought down on one knee mid-air and proposed to his #fiancee, who was stunned by the romantic gesture #AirI…https://t.co/ETqzEBzjKH
— rameshkotnana (@rameshkotnana1) January 11, 2023
இதுகுறித்து ஏர் இந்தியா பகிர்ந்த வீடியோவில், ‘ அந்த நபர் தனது கையில் பெரிய ரோஸ் நிறத்திலான பேனருடன் பறக்கும் விமானத்தின் நடுவே சென்று தன் வருங்கால மனைவிக்கு அருகில் நின்றார். அப்போது அந்த பெண் இரண்டு சீட்கள் தள்ளி உட்கார்ந்து இருந்தார். அந்த நபர் அந்த பெண்ணின் அருகே சென்றதும் ஆச்சரியப்பட்ட பெண், எழுந்து விமானத்தில் நடுவே வந்தார்.
அப்போது, திடீரென ஒரு காலை மடக்கி முட்டிபோது அந்த நபர், தனது கையில் மோதிரத்தை அந்த பெண்ணுக்கு நேராக நீட்டினார். தொடர்ந்து ‘ என்னால் உங்களுடன் வாழ்க்கையில் நீண்ட தூரம் நடக்க முடியும். உங்களுக்கு என்னுடன் நடக்க விருப்பமா? என்று கேட்டார்.
அப்போது மகிழ்ச்சியில் திகைத்துப்போன அந்த பெண், திடீரென தாவி அந்த நபரை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டு தனது காதலையும் வெளிப்படுத்தினார்.