தாம் தூம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மாடல் அழகி கங்கனா ரனாவத். பாலிவுட்டில் மிகவும் பிஸியாக நடித்து வரும் இவர், அண்மையில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து அசத்தியிருந்தார்.
இந்திரா காந்தியாக கங்கனா :
Information Reels
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஜூன் 25, 1975 முதல் மார்ச் 21, 1977 வரை நாடு முழுவதும் எமர்ஜென்சியை அமல்படுத்தியதை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் ‘எமர்ஜென்சி’ திரைப்படத்தை இயக்கி இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கங்கனா ரனாவத். மேலும் இந்த படத்தில் அனுபம் கெர் , சதீஷ் கவுசிக், ஸ்ரேயாஸ் தல்படே மற்றும் மிலிந்த் சோமன் ஆகியோரும் நடித்துள்ளனர்.ரித்தேஷ் ஷா இப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
நாடாளுமன்ற வளாகத்தில் படப்பிடிப்பு:
Kangana Ranaut Was Allowed To Shoot #Emergency at PM Home New #Delhi Then Why Not in Parliament? #KanganaRanaut𓃵 Pls Kindly Give Permission Sir, @PMOIndia @AmitShah @LokSabha_PRIDE 🙏 #KanganaRanaut pic.twitter.com/QmAa79VBdv
— Pooja #Tejas ✈️ In Cinemas Quickly.. 😇🇮🇳 (@PoojaKRFan) December 18, 2022
அரசு ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷன் மற்றும் சன்சாத் டிவி மட்டுமே நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் உள்ளேயும் நடக்கும் நிகழ்வுகளை வீடியோ எடுக்க அனுமதி உள்ளது என்பதை அறிந்தும், ‘எமர்ஜென்சி’ படத்தின் படப்பிடிப்பிற்காக நாடாளுமன்ற வளாகத்தில் படப்பிடிப்பு நடத்த மக்களவை செயலாளரிடம் கடிதம் மூலம் அனுமதி கோரியுள்ளார் கங்கனா ரனாவத். இந்த விஷயம் பெரிய பரபரப்பை உண்டாக்கியது.
இதனையடுத்து வதந்திகளை பரவும் கும்பல் ஒன்று, கங்கனா எழுதிய கடிதத்திற்கு பதில் கிடைத்துவிட்டது என்றும், எமர்ஜென்சி படத்தை நாடாளுமன்றத்தில் ஷூட் செய்து கொள்ள அனுமதி கிடைத்துவிட்டது என்றும், அந்த கும்பல் மீம்ஸ்களை பகிர்ந்துள்ளது. அதற்கு, பதிலளித்த கங்கனா, “இது உண்மை அல்ல..இது ஒரு பொய்யான செய்தி.” என்று தனது இன்ஸ்டா பக்கத்தில் உள்ள ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.