‘அவதார் 2’ படத்தின் வசூல்: இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி | ‘Avatar 2’ assortment: Rs 100 crore in India alone

‘பதான்’ தேசபக்தி படம் – ஷாருக்கான் பதில்

ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்துள்ள படம், ‘பதான்’. ஜன.25ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘பேஷரம் ரங்’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையானது. இதில் தீபிகா படுகோன், காவி நிற நீச்சல் உடையணிந்து கவர்ச்சியாக ஆடியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தி விட்டதாகக் கூறி, அவர்கள் மீது புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

‘பதான்’ படத்தைப் புறக்கணியுங்கள் என்று சமூக வலைதளங்களில் ஒரு தரப்பினர் கூறிவந்தனர். இந்நிலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு ட்விட்டரில் பதிலளித்த ஷாருக்கான், “பதான் தேசபக்திப் படம்தான். ஆனால் வேறு கோணத்தில் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். ‘பதான்’ படத்தின் முதல் நாள் வசூல் பற்றி கணியுங்கள் என்று ஒருவர் கேட்டதற்கு, “நான் வசூலை கணிப்பவனல்ல, ரசிகர்களை மகிழ்விப்பவன்” என்று தெரிவித்துள்ளார்.

சினிமா துளிகள்

> ‘அவதார் 2’ படத்தின் வசூல் இந்தியாவில் மட்டும் இதுவரை, ரூ.100 கோடியை தாண்டியுள்ளது.

> வசந்தபாலன் தயாரித்து, இயக்கியுள்ள ‘அநீதி’ படத்தை இயக்குநர் ஷங்கர் பிப்ரவரியில் வெளியிடுகிறார்.

> சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தில், ‘அவதார் 2’வில் பணிபுரிந்த டெக்னீஷியன்கள் கிராபிக்ஸில் பணிபுரிகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles