உலகம் முழுக்க ரூ. 3,500 கோடி; இந்தியாவில் ரூ. 160 கோடி – மாஸ் காட்டும் ‘அவதார் தி வே ஆஃப் வாட்டர்’ | James Cameron Avatar: The Approach Of Water field workplace assortment day 3

‘அவதார் தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.3,500 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி, உலகெங்கும் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த படம் ‘அவதார்’. இரண்டு மணிநேரம் 40 நிமிடங்கள் நம்மை வேறு உலகக்கு அழைத்து சென்றிருந்தது இத்திரைப்படம். ரூ.1000 கோடி செலவில் உருவான இப்படம் உலகம் முழுவதும் ரூ.280 கோடி அமெரிக்க டாலர்களை வசூலித்தது. அதுவரை வேறு எந்தத் திரைப்படமும் நிகழ்த்த முடியாத வசூல் சாதனையை இத்திரைப்படம் நிகழ்த்தியது.

கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த டிச.16 வெளியானது. முதல் பாகத்தைப்போல மிகச் சிறப்பான காட்சி அனுபவத்துடன் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியானது. உலகம் முழுக்க 52ஆயிரம் திரையரங்குகளில் படம் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் படம் வெளியாகி 3 நாட்களில் இந்திய அளவில் ரூ.160 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர, படம் உலகம் முழுவதும் ரூ.3,500 கோடியை வசூலித்து மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசூல், வரும் காலங்களில் இன்னும் தொடர்ந்து அதிகரிக்கும் என கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 3 ஆயிரம் கோடியில் உருவான இப்படம் அதன் பட்ஜெட்டை தாண்டி வசூலித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,681FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles