”டிஜிட்டல் உலகத்துக்கு மாறுவோம் இனி, கவனமாக இல்லைனா தலைல துணி” – துணிவு 2ம் பாடல் வெளியீடு

நடிகர் அஜித்குமாரின் துணிவு படத்தின் இரண்டாவது பாடலான “காசே தான் கடவுளடா” பாடல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஒரு மணி நேரத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து கலக்கி வருகிறது.

இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் துணிவு படத்திற்கான முதல் பாடல் “சில்லா சில்லா” வெளியாகி ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது இரண்டாவது பாடலாக “காசே தான் கடவுளடா” பாடல் வெளியாகி இணையதளத்தை கலக்கி வருகிறது.

காசே தான் கடவுளடா ; அந்த கடவுளும் என்ன படுத்துதடா

image

பணம் பணம் எல்லா இடத்துலையும் பணம் என்கிற பொருளின் படி இந்த பாடலை எழுதி இசைமைத்திருக்கின்றனர் படக்குழுவினர். வைசாக் வரிகளில், ஜிப்ரான் இசையில் வெளியாகியிருக்கும் காசே தான் கடவுளடா பாடல் அனைவரையும் கவர்ந்து வருகிறது. ”பொறக்குற நொடில வெரட்டுது காசு, நிம்மதிய பண்ணுது குளோசு”, ”ஏகப்பட்ட EMI ல நாடே கிடக்கு”,”டிஜிட்டல் உலகத்துக்கு மாறுவோம் இனி, கொஞ்சம் கவனமாக இல்லைனா உன் தலைல துணி” போன்ற வரிகளில் தற்போதைய வணிகமயமாதலின் எதிரொலியாய் இருப்பது கவரும் படி அமைந்துள்ளது. இசையும் வரிகளுக்கேற்றார் போல் சிறப்பாகவே அமைந்துள்ளது.

Goodness Freewill ; 50 World Models

image

பாடலுக்கு இடையில் ஒரு காய்ன் சுற்றுகிறது, அதில் குட்னெஸ் ஃப்ரீவில் என்றும், 50 உலக யுனிட்ஸ் என்ற சொற்கள் இடம்பெற்றுள்ளது. இது பேங்க் ராப்பரி பற்றிய படம் என்பதால் கொள்கை ரீதியான வாக்கியமும், ராப்பரி குறித்த வாக்கியமும் இடம்பெற்றுள்ளது. சுதந்திரத்தில் நன்மை என்பது கல்வி, வேலை, இருப்பிடம் என மூன்றும் அனைவருக்கும் சமமாக கிடைக்கவேண்டும் என்பது. அதில் பணத்தின் பெரும்பான்மை எப்படி செயல்படுகிறது என்பதை குறிக்கும் வாக்கியமாகவும், உலக ரீதியான வர்த்தக மையத்தில் பணத்தை குறித்த பிம்பத்தை விவரிக்கும் விதத்திலும் படம் அமையவிருப்பதை வெளிக்கொணரும் விதமாகவும், இல்லை அதன் பேரில் முழுக்க முழுக்க நெகட்டிவ் சேடாகவும் படம் இருக்கவும் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

image

சிவா இயக்கத்தில் ஹிட் படங்களை தொடர்ந்து, ஒரு கலவையான விமர்சன ரீதியான படத்திற்கு பிறகு, விஸ்வாசம் போன்ற பெரிய சூப்பர்ஹிட் படத்தை கொடுத்தது போல, வலிமை போன்ற படத்திற்கு பிறகு மூன்றாவது படத்தில் இணைந்திருக்கும் இந்த கூட்டணி துணிவை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் முனைப்பில் செயல்பட்டு வருகிறது.

Supply : WWW.TAMILFUNZONE.COM

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,691FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles