Kajal Aggarwal Shares Video Of Her Cute Household In Instagram Wins Netizens Hearts

தனது குழந்தை, கணவர் மற்றும் செல்ல நாயுடன் மகிழ்ச்சியாக இருக்கும் வீடியோவை காஜல் அகர்வால் இன்ஸ்டாவில் பகிர்ந்து லைக்ஸ் அள்ளி வருகிறார்.

குழந்தையுடன் காஜல்:

மகதீரா, துப்பாக்கி உள்ளட்ட படங்களில் தமிழ், தெலுங்கு ரசிகர்களைக் கட்டிப்போட்டு கோலிவுட், டோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த காஜல், கடந்த 2020ஆம் ஆண்டு தொழிலதிபர் கௌதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார். கொரோனா காலக்கட்டத்தில் இவர்கள் திருமணம் நடைபெற்ற நிலையில், கடந்தாண்டு கருவுற்றார்.

ஃபோட்டோஷூட் நடத்தி தான் கருவுற்றிருப்பதை காஜல் அறிவித்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தங்கள் குழந்தைக்கு நீல் எனப் பெயர் சூட்டிய காஜல் – கௌதம் தம்பதி தொடர்ந்து தங்கள் குழந்தையில் புகைப்படங்களை முழுமையாக முகம் தெரியாமல் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வந்தனர்.

Information Reels

இந்நிலையில் தற்போது குழந்தையின் முகம் முழுவதுமாக தெரியும்படியான ஃபோட்டோவுடன் வீடியோ ஒன்றை காஜல் பகிர்ந்துள்ளார்.

 


இந்த வீடியோ காஜலின் ஃபாலோயர்கள், ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி லைக்ஸ் அள்ளி வருகிறது. முன்னதாக இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் விஜய், அமீர் கான், அமிதாப்பச்சன் உள்ளிட்டோரை காஜல் அகர்வால் பின்னுக்குத் தள்ளி சாதனை படைத்தார். 

நடிகர் விஜய் இந்தப் பட்டியலில் 22வது இடத்தைப் பிடித்த நிலையில், காஜல் அகர்வால் 15வது இடத்தைப் பிடித்திருந்தார். தாயான பின்பு தற்போது ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் காஜல் கலந்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,681FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles