சென்னை: நடிகர்கள் விஜய் ஆண்டனி, சோனு சூட் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தமிழரசன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
சுமார் 1.55 நிமிடங்கள் டைம் டியூரேஷன் கொண்ட இந்த படத்தின் ட்ரெய்லரில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு காட்சியும் கவனம் ஈர்க்கிறது. ‘கடவுள் மனுஷனோட விளையாட மாட்டான். மனுஷன்தான் மனுஷன் கூட விளையாடுவான்’ என தொடங்குகிறது இந்த ட்ரெய்லர்.