மாண்டஸ் புயல் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை பட்டினப்பாக்கத்தில் கனமழை காரணமாக சாலையில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
குறிப்பாக அலுவலகப் பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனங்களில் வீட்டுக்குச் செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சென்னையிலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாமல்லபுரத்தில் புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, மாமல்லபுரத்தில் இன்று மாலை 6 மணிக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாமல்லபுரத்தில் பலத்த காற்று வீசி வருகிறது.
#WATCH | Waterlogging in Pattinapakkam space of Chennai as rain continues within the metropolis below the affect of cyclone Mandous pic.twitter.com/Vc17uYbwT7
Information Reels
— ANI (@ANI) December 9, 2022
மேலும் இன்று நள்ளிரவு தொடங்கி நாளை அதிகாலை 65 மணி வரை அதிகபட்சமாக 65-75 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ’மாண்டஸ்’ புயல் காரணமாக வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரப் கடற்கரைகளுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயலின் காரணமாகக் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் மிக அவசியமான காரணங்களுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்ளுமாறு போக்குவரத்துக் காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.