<p>தமிழ்நாட்டில் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து தலைமை செயலாளர் இறையன்பு, தென்மண்டல வானிலை மைய இயக்குனர் பாலசந்திரனுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.</p>
<p>தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில், புயல் எச்சரிக்கையை அடுத்து எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. </p>