டிச.22-ல் வெளியாகிறது நயன்தாராவின் ‘கனெக்ட்’ | nayanthara starrer join film launched date introduced

நயன்தாரா நடித்துள்ள ‘கனெக்ட்’ திரைப்படம் வரும் டிசம்பர் 22-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘மாயா’, ‘இரவாக்காலம்’, ‘கேம் ஓவர்’ ஆகிய படங்களை இயக்கிய அஸ்வின் சரவணக்குமார் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் படம் ‘கனெக்ட்’. அனுபம் கெர், சத்யராஜ், வினய், நஃபிசா ஹனியா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு பிருத்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார். விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவு செய்துள்ளார். நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியானது. ஹாரர் – த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம் மொத்தம் 95 நிமிடங்கள் எனவும், படத்தில் இடைவேளை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படம் வரும் டிசம்பர் 22-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் ட்ரெய்லர் வரும் 9-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,690FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles