கல்வி நிலையங்களின் பிரச்சினை பேசும் ‘காலேஜ் ரோடு’  | collage highway film recognize by director pa ranjith

அறிமுக இயக்குநரான ஜெய் அமர்சிங் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காலேஜ் ரோடு’ படத்தை பார்த்து இயக்குநர் பா.ரஞ்சித் பாராட்டியுள்ளார்.

‘கபாலி’, ‘பரியேறும் பெருமாள்’, ‘கஜினிகாந்த்’, ‘டாணாக்காரன்’ படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் லிங்கேஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘காலேஜ் ரோடு’. அறிமுக இயக்குநர் ஜெய் அமர்சிங் இயக்கியுள்ள இப்படம் கல்வி நிலையங்களில் இருக்கும் பிரச்சினையை பேசுகிறது. இப்படத்தில் மோனிகா, ஆனந்த்நாகு, KPY அன்சர், அக்சய்கமல், பொம்முலக்‌ஷ்மி, நாடோடிகள் பரணி, மெட்ராஸ் வினோத், அருவி பாலா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இளைஞர்களின் வாழ்வில் கல்வியின் அவசியமும், அந்த கல்வி இன்று என்னவாக இருக்கிறது. அது அனைவருக்குமானதாக இருக்கிறதா? எதிர்கால சந்ததியினருக்கு கல்வி என்னவாக இருக்கப்போகிறது என்பதை பற்றி பேசுகிற படமாக இருக்கும் என இயக்குநர் தெரிவித்துள்ளார். பரபரப்பான திருப்பங்களோடு காதல் நட்பு நகைச்சுவை கலந்த கம்ர்சியலான படமாகவும் இருக்கும். கல்லூரி மாணவர்களை மனதில் வைத்து திரைப்படத்தை எடுத்துள்ளோம் என்கிறார் இந்த படத்தின் இயக்குநர் ஜெய் அமர்சிங்.

இந்நிலையில், இப்படத்தைப் பார்த்து இயக்குநர் பா.ரஞ்சித் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். படம் வரும் டிசம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,681FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles