Pele Hospitalised: கால்பந்து ஜாம்பவான் பீலே மருத்துவமனையில் அனுமதி…! சோகத்தில் ரசிகர்கள்…

பிரேசில் கால்பந்து வீரர் பீலே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

<robust>பீலே மருத்துவமனையில் அனுமதி:</robust>

அவரது உடல்நிலை சீராக இருப்பதாக பீலேவின் மகள் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். பீலேவின் பெருங்குடலில் இருந்த புற்றுநோய் கட்டி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அகற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து வழக்கமாக அவர் மருத்துவமனைக்கு சோதனைக்காக வருவார்.

பிரேசிலில் 1940-ஆம் ஆண்டு அக்டோபர் 23-ஆம் தேதி பிறந்தார். கால்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னனாக விளங்குபவர். கால்பந்தாட்டத்தை அமெரிக்காவில் பிரபலப் படுத்தியவர்; உலக அமைதிக்கான பரிசு பெற்றவர். 22 ஆண்டு கால்பந்தாட்ட அத்தியாயத்தில் மொத்தம் 1282 கோல்களைப் போட்டவர் பீலே. ஹாட்ரிக் எனப்படும் ஒரே ஆட்டத்தில் தொடர்ந்து மூன்று கோல்கள் போடுவதிலும் உலகச் சாதனையை செய்திருக்கிறார்.

Womens IPL 2023: அம்மாடியோவ்.. மகளிர் ஐபிஎல் அணியின் அடிப்படை விலை இத்தனை கோடியா?

<robust>மருத்துவமனையில் அனுமதி:</robust>

அவர் மொத்தம் 92 ஹாட்ரிக் கோல்களை அடித்துள்ளார்.. மூன்று முறை உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த ஒரே கால்பந்தாட்ட வீரர். கால்பந்தாட்ட உலகின் மிகச் சிறந்த வீரராகக் கருதப்படும் பீலே ‘கருப்பு முத்து’ என்று இதழியலாளர்களால் அழைக்கப்படுகிறார்.

களம் முழுவதும் ஆட்டத்தை உணர்ந்து ஆடும் பாங்கு, சிறப்பாக பந்தை வலைக்குள் தள்ளும் முறை, லாவகமாக இரண்டு-மூன்று தற்காப்பு வீரர்களை ஏமாற்றி முன்னேறும் திறன், தலையாலும், மார்பாலும், தொடையாலும் பந்தை கட்டுப்படுத்தி இலக்கு தவறாமல் பந்தை வலைக்குள் தள்ளும் தந்திரம் என இவரிடம் ஏகப்பட்ட திறமைகள் இருக்கின்றன.

<robust>உலகக்கோப்பை கால்பந்து:</robust>

1977 ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெற்றார் பீலே. முன்னதாக, 22வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கடந்த ஞாயிற்றுக் கிழமை கத்தார் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 32 அணிகள் 64 போட்டிகள் என கத்தாரில் திருவிழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு குரூப்பிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு (காலிறுதிக்கு முந்தையச் சுற்று) முன்னேறும். இன்று முதல் மூன்றாவது கடைசி குரூப் சுற்று ஆட்டங்கள் தொடங்குகின்றன.

ஃபிபா விதிகளின்படி, ஒவ்வொரு குரூப்பிலும் கடைசி இரண்டு போட்டிகள் ஒரே நாளில் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும். குரூப் ஏ பிரிவில் கத்தார் அணி வெளியேறிவிட்டது. மற்ற 3 அணிகளுக்கு அடுத்து சுற்றுக்கான வாய்ப்பு உள்ளது.

இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942 மற்றும் 1946 ஆகிய ஆண்டுகளில் மட்டும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்தப்படவில்லை. கடைசியாக 2018-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. இந்தப் போட்டி டிசம்பர் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அரபு நாட்டில் நடக்கும் முதல் உலகக் கோப்பை போட்டியான இதில் 32 நாடுகளைச் சேர்ந்த கால்பந்து அணிகள் பங்கேற்றுள்ளன.

<robust>8 பிரிவுகள்</robust>
32 அணிகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்களில் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் சந்திக்கும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் 2-ஆவது சுற்றுக்கு (ரவுண்ட்-16) முன்னேறும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,692FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles