8 PM Headlines : மின் வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்.. திமுக தொண்டர் தற்கொலை.. மேலும் இன்றைய முக்கிய செய்திகள்..

<robust>தமிழகம்</robust>

மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்க மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டூரில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை செய்து கொண்ட திமுக பிரமுகருக்கு, திமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. தொழில்துறை அமைச்சர் கணேசன் நேரில் நிதியுதவி வழங்கினார்.

பேருந்து நிறுத்தம் ஒலி அறிவிப்பு திட்டம் சென்னை மாநகர பேருந்துகளில் தொடங்கப்பட்டது. மின்சார ரயில்களை போலவே, பேருந்துகளிலும் நிறுத்தம் பற்றிய ஒலி அறிவிப்பு இனி வெளியாகும். தமிழ், ஆங்கிலத்தில் அடுத்து வரக்கூடிய நிறுத்தம் குறித்து பயணிகளுக்கு அறிவிக்கப்படும்.

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு சங்கீத நாடக அகடமி விருது வழங்கப்பட்டுள்ளதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்

<robust>இந்தியா</robust>

இஸ்ரோவின் பிஎஸ்எல்வி-சி54 ராக்கெட் இன்று விண்ணில் பாய்ந்தது. புவி செயற்கைக்கோளான ஓசன் சாட்-03 மற்றும் 8 நானோ செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது.  ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து காலை 11.56 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்திய 9 செயற்கைகோள்களும் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

மராத்தி, இந்தி படங்களில் நடித்துவந்த மூத்த நடிகர் விக்ரம் கோகலே இன்று (நவ.26) உயிரிழந்தார். அவருக்கு வயது 77. உடல் நிலை பாதிக்கப்பட்டு புனேவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.

இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினார்கள். அப்போது இந்திய மீனவர்களின் நாட்டுப் படகுகள் சேதமாக்கப்பட்டன. தொடர்ந்து மீனவர்களின் வலைகளும் அறுத்துவீசப்பட்டன என மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மின்னணு நீதிமன்ற திட்டத்தின் கீழ் பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. உலக அரங்கில் இந்தியாவை வலிமையான நாடாக மாற்ற வேண்டும் என்றும் அனைத்து துறைகளிலும் இளைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

<robust>விளையாட்டு</robust>

கால்பந்து உலகக் கோப்பை இன்றைய  முதல் ஆட்டத்தில் துனிசியா அணியை ஆஸ்திரேலியா 0-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.

இன்றிரவு 12.30 மணிக்கு சி பிரிவில் முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும், மெக்சிகோவும் மோதுகின்றன. முதல் வெற்றியை எதிர்நோக்கி மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா விளையாடவுள்ளது.

இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடரின் முதல் ஆட்டம் அடிலெய்டில் இன்று தொடங்கியது. இதில் 5-4 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

ஸ்பெயினில் நடைபெற்றுவரும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் பைனலுக்கு ஆஸ்திரேலியா முன்னேறி உள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles