இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, நீரஜ் மாதவ் உட்பட பலர் நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியான வெப் தொடர், ‘தி ஃபேமிலி மேன்’. ராஜ் மற்றும் டீகே இயக்கிய இந்தத் தொடர் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் இரண்டாவது சீசனும் வெளியானது. அதில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி ஆகியோருடன் சமந்தாவும் நடித்திருந்தார். இதுவும் வரவேற்பைப் பெற்றது. இதனால் இதன் 3வது சீசன் உருவாகுமா என்று ரசிகர்கள் கேட்டு வந்தனர்.
இந்நிலையில், அதை உறுதி செய்துள்ளார் நடிகர் மனோஜ் பாஜ்பாய். “அமேசான், அதை முன்பே தொடங்கி இருக்கும். ராஜ் மற்றும் டீகே, அவர்களுடைய மற்ற வேலைகளில் பரபரப்பாக இருப்பதால், ‘தி ஃபேமிலிமேன் 3’ அடுத்த வருடம் தொடங்கும்” என்று அவர் கூறியுள்ளார்.