Tiruppur Authorities Medical Faculty Job Announcement For 31 Lab, Technician Grade –II Publish Final Date Tomorrow

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் காலியாக உள்ள 31 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. இது தற்காலிக வேலைவாய்ப்பு அறிவிப்பு மட்டுமே என்றும் பணி நிரந்தரம் செய்யப்படாது என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்.

பணி விவரம்:

ஆய்வுக்கூட நுட்புநர் நிலை 2- DMLT ((Lab, Technician Grade –II)) 

மொத்த பணியிடங்கள்- 31

Information Reels

கல்வித் தகுதி:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க  விரும்புவோர் இரண்டு ஆண்டு கால மருத்துவ ஆய்வக தொழில் நுட்ப வல்லுநர் படிப்பு அல்லது தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட சான்று அவசியம் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

இந்த பணிக்கு தொகுப்பூதியம் (Consolidated Pay) அடிப்படையில் மாதம் 15,000 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 59 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

இப்பணிக்குத் தகுதியான விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் தங்களின் கல்வி சான்றிதழ்களின் நகல்களில் அனைத்தையும் இணைத்து சுயவிவரங்களுடன் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை மின்னஞ்சல் மற்றும் தபாலில் அனுப்பலாம்.   நேரில் சென்றும் வழங்கலாம்.

குறிப்பு:

விண்ணப்பங்களின் மீது ’ஆய்வுக்கூட நுட்புநர் நிலை 2- தொகுப்பூதிய பணியிட விண்ணப்பம்’  என்று கட்டாயம் குறிப்பிட வேண்டும். 

மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படும் விண்ணப்பங்களின் laborious Copy கட்டாயமாக நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பத்துடன் அனுபவ சான்று இணைக்கப்பட வேண்டும். 

பணியில் சேர்வதற்கான சுயவிருப்ப ஒப்புதல் படிவம் (Below Taking ) அளிக்க வேண்டும்.

ஆய்வுக்கூட நுட்புநர் நிலை-2 பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு கல்லூரி அலுவகலத்தில் நேர்காணல் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் முகவரி : [email protected]

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

முதல்வர்,

அரசு மருத்துவக் கல்லூரி,

திருப்பூர் மாவட்டம் – 641 608.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.11.2022 மாலை 05.00 மணி வரை

அறிவிப்பின் முழு விவரம் அறிய https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2022/11/2022111164.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்யவும்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்புகளை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ வலைதளமான https://tiruppur.nic.in/notice_category/recruitment/

-ல் காணலாம்.


 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles