மருத்துவமனையில் கமல்ஹாசன் அனுமதி: வழக்கமான பரிசோதனை எனத் தகவல் | Actor Kamal Haasan admitted to hospital on account of sudden sickness

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் நேற்று மாலை சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அவரை இரண்டு நாட்கள் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

லேசான காய்ச்சல் இருந்ததால் மருத்துவமனையில் தங்கி கமல்ஹாசன் சிகிச்சை பெற்றதாகவும் இன்று பரிசோதனைகள் முடிந்து அவர் வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக, ஹைதராபாத்தில் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சென்னை திரும்பிய நடிகர் கமல்ஹாசன் லேசான காய்ச்சல் காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். நேற்று இரவு அனுமதிக்கப்பட்ட அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இரவு அவர் அங்கேயே தங்கி சிகிச்சை பெற்றார்.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, சிகிச்சை பெற்றது தொடர்பாக கமல் தரப்பில், இதுவரை அதிகாரபூர்வமாக ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles