“கோயிலில் அனைவரும் சமம்தான்; இனி இவர்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்படும்” – அமைச்சர் சேகர்பாபு அதிரடி

சென்னை நுங்கம்பாக்கத்தில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற சீராய்வுக்கூட்டத்துக்குப் பிறகு அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில், மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட பணி முன்னேற்றம், இதர பணிகள் குறித்த சீராய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது:

“இன்று நடைபெற்ற கூட்டத்தில் கூடுதல் மருத்துவமனைகள் அமைத்தல், ஏற்கெனவே செயல்பட்டு வரும் ஒரு வேளை அன்னதானம் ஆகியவை குறித்து பேசப்பட்டது. சபரிமலை யாத்திரைக்காக 24 மணி நேர தகவல் மையம் அமைத்து, சபரிமலையிலே அரசு அலுவலர்களை இந்து சமய அறநிலைத்துறை நியமிப்பது பற்றியும், தமிழ்நாட்டில் இருந்து வரக்கூடிய பக்தர்களுக்கு உதவி செய்யும் வகையிலான திட்டங்கள் குறித்தும் பேசப்பட்டது.

திமுக பொறுப்பேற்ற பிறகு மாதம் தோறும் இந்து சமய அறநிலைத்துறை செயலர், ஆணையர் சீராய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. 15ஆவது சீராய்வுக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. 3200 கோடி மதிப்பிலான பணிகள் இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலைத்துறை வரலாற்றில், முதலமைச்சர் ஸ்டாலினின் ஆட்சிக் காலத்தில் தான் இவ்வளவு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 300க்கும் மேற்பட்ட கோயில்களின் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயில்களுக்காக நிதி ஒதுக்கி, அக்கோயில்களை புணரமைப்பு செய்வதற்கும், இந்த ஆண்டு டெண்டர் விடுவது பற்றியும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு 30 லட்சத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 87 ஆயிரம் மரக்கன்றுகள் இதுவரை நடப்பட்டுள்ளன. மீதமுள்ள 13 ஆயிரம் மரக்கன்றுகள் விரைவில் நடப்படும். எங்கள் அலுவலர்கள் ஐந்து மணி நேரம் மட்டும் தான் உறங்குகிறார்கள். மீதமுள்ள 19 மணி நேரத்தில் அவர்களை எப்போதும் அழைத்து தொடர்பு கொள்ளலாம்.

காசி தமிழ்ச் சங்கம நிகழ்வில் கலந்துகொள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு அழைப்பு வரவில்லை. வந்தால் அனைத்து உதவிகளையும் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம்.

இந்து சமய அறநிலையத் துறை மீட்டுள்ள நகைகள், பொருட்கள் குறித்து முதல் பாகம் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசு எந்த நிகழ்வு நடத்தினாலும், அவர்களிடம் இருந்து அழைப்பு வந்தால் அதற்கான முழு பணிகளையும் நாங்கள் சிறப்பாக செய்து கொடுப்போம்.

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் விஐபி தரிசனம் படிப்படியாக ரத்து செய்யப்படும். விஐபி தரிசனம் இந்த ஆட்சியில் உருவானது அல்ல. நாளடைவில் விஐபி தரிசனம் முடக்கப்படும்.

திருக்கோயிலில் மக்கள் அனைவரும் சமம். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற நிலை மாற்றப்பட வேண்டும். பாஜக எந்த அவதாரம் எடுத்து வந்தாலும் தமிழ்நாட்டில் நிச்சயமாக கால் ஊன்ற முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles