”பாசமலர், பார் மகளே பார்..” – பிரபல திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் காலமானார்

பிரபல திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் இன்று மாலை (20.11.2022) 6:40 மணிக்கு அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 91.

பாசமலர், படித்தால் மட்டும் போதுமா, பார் மகளே பார், பார்த்தால் பசி தீரும், புதிய பறவை, இரு மலர்கள், தெய்வ மகன், குடும்பம் ஒரு கோவில், தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக்காத்த தனயன், அன்பே வா, குடும்பத்தலைவன்,  தாய்க்குத் தலைமகன், ஆசைமுகம், பெற்றால்தான் பிள்ளையா?, வாழவைத்த தெய்வம், சவுபாக்கியவதி, திருமகள், பெண் என்றால் பெண் உள்ளிட்ட எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகியோர் நடித்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ்.

சென்னை தி நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த ஆரூர்தாஸ் வயது மூப்பின் காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6:40 மணியளவில் அவரது இல்லத்தில் காலமானார். ஆரூர்தாஸ் உடல் திங்கள்கிழமை (நவ. 21) மதியம் 12 மணி வரை அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும். பின்னர் இறுதி சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரூர்தாஸ் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Supply : WWW.TAMILFUNZONE.COM

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles