Madurai Excessive Courtroom Has Ordered The Company Division To Keep The Roads Throughout Wet Days | மழைகாலங்களில் மின் கம்பி செல்லும் பாதைகள் பராமரிக்கப்பட வேண்டும்

மின்சாரம் தாக்கி கணவர் இறந்ததற்கு இழப்பீடு கோரி மனைவி தொடுத்த வழக்கில், கணவனை இழந்த மனைவிக்கு ரூ.10 லட்சம் 85 ஆயிரம் உடன் கணவர் இறந்ததிலிருந்து வருடத்திற்கு 6% வட்டியுடன் சேர்த்து இழப்பீடு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

 

மதுரை சேர்ந்த சூரியகாந்தி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு. அதில், ” எனது கணவர் பெயர் சதுரகிரி தனியார் நிறுவனத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார் கடந்த 2013 ஆம் ஆண்டு எனது வீட்டிற்கு அருகே வாழை தோப்பில் குளிக்க சென்ற போது மின் கம்பி அறுந்து விழுந்து சம்பவ இடத்தில் உயிரிழந்து விட்டார்.

 

இது குறித்து மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. நான் பட்டியல் இனத்தை சமூகத்தைச் சேர்ந்தவள் கணவரின் வருமானத்தில் இருந்தே நானும் எனது இரண்டு குழந்தைகளும் பிழைப்பு நடத்தி வந்தோம் எனது கணவர் இறப்பிற்கு பின் வாழ்வாதாரத்திற்கு மிகவும் சிரமம் அடைந்து வருகின்றோம். மின்வாரியத்தின் கவனக்குறைவால் இறந்து போன எனது கணவரின் மரணத்திற்கு உரிய இழப்பீடு கொடுக்க உத்தரவிட வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த மனு நீதிபதி விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மின் வாரியம் தரப்பில், இயற்கையின் சீற்றத்தால்  தென்னை மர கிளை விழுந்ததால் வயர் அருந்து மின்சாரம் தாக்கி இறந்துள்ளார் இதற்கு மின்வாரியம் பொறுப்பாகாது என தெரிவிக்கப்பட்டது.

 

இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில்,

 

* பருவநிலை மாற்றங்கள், மழை காலங்கள் போன்ற காலங்களில் மின் கம்பி செல்லும் பாதைகள் பராமரிக்கப்பட வேண்டும்.

 

* மரக்கிளைகள் மின் கம்பிகளில் ஊடுருவாமல் பார்த்துக் கொள்ளப்பட வேண்டும்.

 

* இது போன்று விபத்துகளுக்கு மின்வாரியம் பொறுப்பேற்க வேண்டும் என உச்ச நீதிமன்ற பல்வேறு தீர்ப்புகளில் கூறியுள்ளது.

 

* மேலும் மின் கம்பியில் தென்னை மர கிளைகள் விழுந்து மனுதாரர் கணவர் இறந்ததற்கு இயற்கையை குற்றம் கூறி தப்பிக்க  முடியாது இதற்கு மின்வாரியம் தான் பொறுப்பு என கூறி மனுதாரரின் கணவர் இறந்ததற்கு மின்வாரியமே முழு பொறுப்பேற்க வேண்டும் என உத்தரவிட்டு, மின்சாரம் தாக்கி இறந்தவரின் வயது 39 இதை கருத்தில் கொள்ள வேண்டும் மேலும் அவரது மனைவி 2 குழந்தைகள் உள்ளதால் மின்வாரியம் மனுதாரருக்கு 10 லட்சத்தி 85 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும். இழப்பீடு தொகையில் 2013 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 6% வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,598FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles