Achcham Enbadhu Illayae Film Posters Out On Behalf Of Actor Arun Vijay Birthday HBD Arun Vijay

ஏ.எல். விஜய் இயக்கத்தில், ஸ்ரீ ஷீரடி சாய் மூவிஸ் பேனரின் சார்பில் ராஜசேகர் மற்றும் சுவாதி இணைந்து தயாரிக்கும் திரைப்படம் “அச்சம் என்பது இல்லையே”. இப்படத்தில் அருண் விஜய் மற்றும் எமி ஜாக்சன் நடிக்கின்றனர். மலையாள நடிகையான நிமிஷா சஜயன் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இப்படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோ படத்தின் தலைப்புடன் விஜயதசமியான நேற்று வெளியானது. இது ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகிறது. இப்படத்தின் முக்கியமான காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட்டுள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், படம் 2023ம் ஆண்டு மத்தியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் இன்று நடிகர் அருண் விஜய்யின் பிறந்த நாளையொட்டி படக்குழுவினர் அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ‘அச்சம் என்பது இல்லையே’ திரைப்படத்தின் இரண்டு போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். 


Reels

வெளியான போஸ்டர்களை நடிகர் அருண் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு  படக்குழுவினர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அற்புதமான அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்களின் வரவேற்பை பெற்ற சினம்:


அருண் விஜய் சமீப காலமாக அடுத்தடுத்து படங்களில் பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தில் ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் சினம். பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை, சிறுமியர் கடத்தல் பாலியல் பலாத்காரம் போன்ற அநியாயங்களுக்கு எதிராக எவ்வாறு மக்கள் போராட வேண்டும் என்பதை வலியுறுத்தும் படமாக இது எடுக்கப்பட்டு இருந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் அருண் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.  

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles