தொடர் மழை காரணமாக சீர்காழியில் உள்ள பள்ளிகளுக்கு நாளை ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தொடர் மழை காரணமாக சீர்காழியில் உள்ள பள்ளிகளுக்கு நாளை ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க | தமிழக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவராக நீதிபதி பாரதிதாசன் நியமனம்!
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சீர்காழி பகுதியில் திரும்பிய இடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
இந்நிலையில் சீர்காழியில் உள்ள பள்ளிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு மட்டும் நாளை (வெள்ளிக்கிழமை) 18-11-2022 விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.