வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சீர்காழி பகுதியில் திரும்பிய இடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
இந்நிலையில் சீர்காழியில் உள்ள பள்ளிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (வியாழக்கிழமை) 17-11-2022 விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.