வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைய வாய்ப்பு

வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது முதலே, பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இதனிடையே இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நவம்பர் 9ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதையும் படிக்க- டி20 உலகக்கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

இந்த நிலையில் நவ.9-ல் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவான பிறகு 48 மணிநேரத்தில் வலுவடையக் கூடும் என்றும் இது வலுவடைந்து வடமேற்கு திசையில் தமிழ்நாடு, புதுச்சேரி கரையை நோக்கி நகர்ந்து வரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது தெரிவித்துள்ளது. 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,596FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles