Union Finance Minster Appreciates Kantara And Conveyed Her Needs To Rishab Shetty By means of Telephone Name

ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட படைப்புகளான கே.ஜி.எஃப்., கே.ஜி.எஃப்  2 படங்களை தொடர்ந்து சமீபத்தில் வெளியான படம் “காந்தாரா”. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இப்படத்தில் கிஷோர், சப்தமி கவுடா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கடந்த செப்டம்பர் 30ம் தேதி காந்தாரா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. கன்னடத்தில் வெளியான இப்படம் அமோகமான வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அனைத்து மொழிகளிலுமே ரசிகர்களின் வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரி குவித்து சாதனை படைத்துள்ளது. 

 

 

பிரபலங்கள் பாராட்டு :

திரை ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரின் பாராட்டைப் பெற்றது. படத்தின் நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு பாராட்டுக்கள் மலை போல குவிந்து வருகிறது. இப்படத்தை நடிகர்கள் கார்த்தி, தனுஷ், ப்ரித்விராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் பாராட்டினர். நேரடியாகவும் , சோசியல் மீடியா மூலமும் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர். 

 

 

“காந்தாரா” படத்தை பாராட்டிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் :

அந்த வகையில் பிளாக் பஸ்டர் சூப்பர் ஹிட் திரைப்படமான “காந்தாரா” திரைப்படத்தை பெங்களூருவில் இன்று கண்டுகளித்துள்ளார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். படத்தை மிகவும் ரசித்து பார்த்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பாராட்டுகளையும் படக்குழுவினருக்கு தெரிவிக்க தவறவில்லை. உடனடியாக தனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் “காந்தாரா” படத்தின் நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு போன் கால் மூலம் தெரிவித்துக் கொண்டார். அவர் பெங்களூருவில் “காந்தாரா” திரைப்படத்தை பார்த்த போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல் வேகமாக பரவி வருகிறது. இது அப்படத்திற்கும்  படக்குழுவினருக்கும் கிடைத்த மாபெரும் அங்கீகாரம். 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,596FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles