Kudos To The Madurai Lady Who Received Gold In The Kettle Bell World Powerlifting Championship TNN

மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த ராஜேஷ் – தீபா தம்பதியினரின் மகள் கேஷினி ராஜேஷ் பி.காம் பட்டாதாரியான இவர் (கெட்டில் பெல்) எனும் பெண்கள் வலுதூக்கும் போட்டியில் 2 அரை ஆண்டுகளாக சென்னையைச் சேர்ந்த விக்னேஷ் ஹரிஹரனிடம் பயிற்சி பெற்றுள்ளார். இந்திய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச போட்டி, ஆசிய விளையாட்டு போட்டியில் 2-வது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார்.

 

கடந்த 18- ஆம் தேதி டெல்லி தால்கா போரா ஸ்டேயத்தில் நடைபெற்ற 23 வயதிற்குட்பட்ட உலக பெண்கள் கெட்டில் பெல் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என சாதனை புரிந்தார் அவருக்கு மதுரை விமான நிலைத்தில் அவரது குடும்பத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 

இதுகுறித்து விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்றேன். அங்கு சென்ற பிறகுதான் இப்படி ஒரு போட்டி இருப்பது என்பது எனக்கு தெரிய வந்தது. அதனால் சென்னையைச் சேர்ந்த விக்னேஷ் ஹரிஹரனிடம் பயிற்சி பெற்றேன்.  நாட்டிற்காக செய்ய வேண்டும் என்பதற்காக வலுதூக்கும் போட்டியில் பெட்டில் பெல் பிரிவில் ஜூனியரில் இந்தியா அணிக்காக விளையாடி தங்கப்பதக்கம் வென்றேன். இந்த போட்டி இரு கைகளிலும் சம அளவு 16 கிலோ எடையை பத்து நிமிடம் சைக்கிளிங் வகையில் செய்து காட்ட வேண்டும்.

 

அதை செய்து இந்தியாவிலேயே ஜூனியர் பிரிவில் தங்கம் வென்ற முதல் பெண்மணி என்ற சாதனையை புரிந்துள்ளேன். வெளிநாடுகளில் அதிக எடை கொண்ட பிரிவில் போட்டிகளில் பங்கேற்று நமது தேசிய கீதத்தை ஒலிக்க செய்ய வேண்டும் என்பதை எனது நோக்கம்.  ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் போட்டியில் பெண்களும் சாதிக்க வேண்டும் என்ற வெறியில் நுழைந்து போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளேன். இந்த போட்டி பற்றி அனைத்து பெண்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே எனது நோக்கம்” என தெரிவித்தார்.

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles