சினேகன் புகார் : ஜெயலட்சுமி மீது மோசடி வழக்கு பதிவு

சினேகன் புகார் : ஜெயலட்சுமி மீது மோசடி வழக்கு பதிவு

28 அக், 2022 – 11:31 IST

எழுத்தின் அளவு:


திரைப்பட பாடலாசிரியரும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பிரமுகருமான சினேகன் கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகையும் பா.ஜ.க பிரமுகருமான ஜெயலட்சுமி மீது போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் புகார் செய்தார். அந்த புகாரில் “நான் சினேகம் பவுண்டேசன் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளையை நடத்தி வருகிறேன். என்னுடைய அறக்கட்டளை மூலம் தமிழகம் முழுவதும் பல சேவை திட்டங்களை சிறப்பாக சட்டத்துக்கு உட்பட்டு, தற்போது வரை செய்து வருகிறேன். சமீபகாலமாக நடிகை ஜெயலட்சுமி, இணையத்தில் நான்தான் சினேகன் அறகட்டளை நிறுவனர் என்று கூறி என் அறக்கட்டளை பெயரை பயன்படுத்தி நிதி வசூலித்து வருகிறார். இந்த மோசடி குறித்து வருமான வரித்துறை என் கவனத்துக்கு கொண்டு வந்தனர். எனவே, பொது மக்களை ஏமாற்றி வரும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த புகாரை தொடர்ந்து சினேகன் மீது கமிஷனர் அலுவலத்தில் ஜெயலட்சுமி புகார் செய்திருந்தார். அப்போது தான் நடத்தி வரும் அறக்கட்டளையின் ஆதாரங்களை வெளியிட்ட ஜெயலட்சுமி, சினேகன் பொய் புகார் அளித்திருப்பதாக தெரிவித்தார்.

இதற்கிடையே நடிகை ஜெயலட்சுமி மீது கொடுக்கப்பட்ட புகாரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சினேகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சினேகன் புகாரின் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதால் நடிகை ஜெயலட்சுமி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க திருமங்கலம் குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சினேகன் அறக்கட்டளை பெயரில் பொதுமக்களிடம் நிதி வசூலித்து மோசடி செய்ததாக திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த மோசடி தொடர்பாக நேரில் வந்து விளக்கம் அளிக்க போலீஸ் முன் ஆஜராகுமாறு ஜெயலட்சுமிக்கு சம்மன் அனுப்பப்ட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,596FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles