பல்லவர் கால அமானுஷ்யங்கள் ‘நந்திவர்மன்’ இயக்குநர் வியப்பு | Pallavar interval occult Nandivarman director

சுரேஷ் ரவி நாயகனாக நடிக்கும் படம், ‘நந்திவர்மன்’. ஏ.கே பிலிம் ஃபேக்டரி சார்பில் அருண்குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தை பெருமாள் வரதன் இயக்கியுள்ளார். ஆஷா கவுடா, போஸ் வெங்கட், நிழல்கள் ரவி உட்பட பலர் நடித்துள்ளனர்.

படம்பற்றி பெருமாள் வரதன் கூறியதாவது:

நான் செஞ்சிக்கோட்டைக்குச் சென்றிருந்தபோது, பெரியவர் ஒருவர், அங்கு நடக்கும் அமானுஷ்ய விஷயங்கள் பற்றிச் சொன்னார். வியப்பாக இருந்தது. பிறகு அந்தப் பகுதியை ஆண்ட பல்லவர்கள் பற்றியும், அங்கு நிலவும் அமானுஷ்ய விஷயங்கள் பற்றியும் ஆய்வு மேற்கொண்டேன். ஆச்சர்யமான கதைகள் கிடைத்தன. அதை வைத்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறேன். படம் தொடங்கும் முன், பல்லவர்கள் வரலாற்றை அனிமேஷன் மூலம் சொல்கிறோம். தொடர்ந்து தொல்லியல் துறையினர், நந்திவர்மன் வாழ்ந்த இடம் தேடி செல்கிறார்கள். அப்போது நடக்கும் பிரச்னைகளையும் பல்லவர்கள் பற்றிய ரகசியங்களை வெளி கொண்டு வரும் வகையிலும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் படம் புது அனுபவத்தைக் கொடுக்கும். இவ்வாறு பெருமாள் வரதன் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles