5678 : நடனத்தை அடிப்படையாக கொண்ட வெப் தொடர்

5678 : நடனத்தை அடிப்படையாக கொண்ட வெப் தொடர்

18 அக், 2022 – 10:52 IST

எழுத்தின் அளவு:


ஹாலிவுட்டில் நடனத்தை அடிப்படையாக கொண்ட திரைப்படங்கள், வெப் தொடர்கள் அதிக அளவில் வெளியாகும். இந்தியாவில் அவ்வப்போது சில படங்கள் வெளியாகி இருக்கின்றன. முதன் முறையாக நடத்தை மையமாக கொண்டு 5678 என்ற பெயரில் வெப் தொடர் ஒன்று தயாராகி உள்ளது. இந்த தமிழ் ஒரிஜினல் வெப் தொடர் அடுத்த மாதம் 18ம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாகிறது.

இந்த தொடரை புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி உள்ளனர். ஏ.எல்.அழகப்பன், ஹிதேஷ் தாக்கூர் தயாரித்துள்ளனர். செம்பா, விக்ரம், தினேஷ் மற்றும் ஸ்வேதா நடித்துள்ளனர்.

சமூகத்தின் அடிதட்டில் இருக்கும் இளைஞர்கள் இணைந்து ஒரு நடன குழுவை உருவாக்குகிறார்கள். திறமை இருந்தும் அதற்கான வாய்ப்பை பெறுவது எப்படி என்று தெரியாமல் தவிக்கிறார்கள். பணக்காரர்கள் எளிதில் வெற்றி பெற முடிகிற ஒரு தளத்தில் இவர்கள் எப்படி போராடி வெற்றி பெறுகிறார்கள் என்பது தான் இந்த தொடரின் கதை.

இதுகுறித்து இயக்குனர் விஜய் கூறியதாவது : இளமை நிறைந்த மற்றும் திறமைமிக்க நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தத் தொடரின் படப்பிடிப்பின் போது சுதந்திர மனப்பான்மை கொண்ட இந்த இளைஞர்கள் நிறைந்த உத்வேகத்துடன் மிகக்கடுமையான உழைப்பை வழங்கினர். இந்தத் தொடர் உலகெங்கிலும் உள்ள 190 நாடுகளின் பார்வையாளர்களை சென்றடைந்து அவர்களின் உள்ளத்தில் இடம் பிடிக்கப் போகிறது என்பது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தத் தொடரை பார்வையாளர்கள் இருகரம் நீட்டி ஏற்றுக்கொண்டு ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறோம். என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,598FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles