இப்படியான நபரை சந்தித்தால் திருமணத்துக்கு தயார்-  நடிகை த்ரிஷா ஓபன் டாக் | Prepared for marriage if you happen to meet such a person- Actress Trisha Open Speak

நடிகை த்ரிஷா தனது திருமணம் தொடர்பாக பேசியுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கேரக்டர் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதில் மீண்டும் நீங்கா இடம்பெற்றுள்ளார் நடிகை த்ரிஷா. அவரின் சினிமா கரியரில் பல வெற்றி படங்களில் நடித்திருந்தாலும், பொன்னியின் செல்வன் அவருக்கு மேலும் ஒரு அடையாளத்தை கொடுத்துள்ளது.

மிஸ் சென்னை அழகி பட்டம் வென்ற த்ரிஷா தமிழ் சினிமாவில் இத்தனை ஆண்டுகள் இயங்கி வந்தாலும், இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவ்வப்போது அவரிடமே திருமணம் குறித்து கேட்கப்படுவதுண்டு. அப்படிதான் சமீபத்தில் பொன்னியின் செல்வன் விழா ஒன்றில் கலந்துகொண்ட த்ரிஷாவிடம் மீண்டும் திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட அதற்கு, “மற்றவர்கள் சாதாரணமாக என்னிடம் எப்போது திருமணம் என்று கேட்டால்கூட பதில் சொல்லுவேன். ஆனால், யாரவது ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று கேட்டால் அவர்களை எனக்கு சுத்தமாக பிடிக்காது” என்று அதிரடியாக பதில் கொடுத்தவர் தனது நண்பர்களின் திருமண வாழ்க்கை தொடர்பாக பேசினார்.

அதில், “திருமணத்துக்கு பிறகு விவகாரத்து என்பதே எனக்கு வேண்டாம். விவகாரத்தின்மீதும் நம்பிக்கை கிடையாது. மகிழ்ச்சியில்லாத ஒரு திருமணத்தை செய்துகொண்ட வாழ்வதற்கும் எனக்கு விருப்பம் கிடையாது. வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழக்கூடிய மனிதர் இவர்தான் என்று எனக்கு தோன்ற வேண்டும். அப்படியான ஒரு நபரை சந்தித்தால் திருமணம் முடிப்பேன்” என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles