'காஃபி வித் காதல்' படம் தள்ளிப்போக 'பொன்னியின் செல்வன்' தான் காரணமா? – குஷ்புவின் பதில்

எம்.எஸ்.சக்திவேல் இயக்கத்தில் ராஜாத்தி பாண்டியன், ஆரா, கோவை சரளா நடித்துள்ள ‘ஒன்வே’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட குஷ்பு நிகழ்வு முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

 வெற்றிமாறன் ராஜராஜ சோழனுக்கு இந்து அடையாளங்கள் கொடுக்கப்பட்டது எனக் கூறியுள்ளாரே?

அது ஒவ்வொருவருடைய பார்வையை பொறுத்தது. வெற்றிமாறன் பற்றி நான் பேச விரும்பவில்லை. அடுத்து பொன்னியின் செல்வனையும் பாகுபலியையும் ஒப்பிடுவது பற்றிக் கேட்கப்பட்ட போது, ‘’தமிழ்ப்படம் தெலுங்குப் படம் என நாம் பார்க்க வேண்டாம். அது ஒரு இந்திய படம். ஒரு தமிழராக இப்படியான ஒரு வரலாற்றைப் பதிவு செய்ததில் நாம் பெருமைப்பட வேண்டும். படத்தைக் கேலி செய்பவர்கள், மீம்ஸ் போடுபவர்கள் பற்றி கவலைப் படக்கூடாது.

சைவ வைணவ அடையாளங்கள் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது விமர்சனத்துக்குள்ளானதே..?

மணிரத்னம் ஒரு படம் செய்கிறார் என்றால் அதைப் பற்றி ஆராயாமல் செய்யமாட்டார். படத்தில் குறைகள் இருக்கிறது என சொல்பவர்கள் வரலாற்றை படித்துவிட்டு வந்து பேசுங்கள்.

image

விஜயின் வாரிசு படத்தில் நடிக்கிறீர்களா ?

வாரிசு படத்தின் ஷூட்டிங் நாங்கள் இருந்த இடத்திற்கு அருகில் நடந்தது. அதனால் அங்கு சென்றேன், அப்போது எடுத்த புகைப்படங்கள் தான் வெளியே வந்தது. மற்றபடி வாரிசு படத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.”

பொன்னியின் செல்வன் படத்தால் தான் காஃபி வித் காதல் படம் தாமதமாகிறதா?

காஃபி வித் காதல் படம் ஒரு ஃபீல் குட் படமாக, குடும்பங்கள் ரசிக்கும்படியும் உருவாகியிருக்கிறது. படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் இன்னும் முடியவில்லை, எனவே படத்தை போஸ்பான்ட் செய்து அடுத்த மாதம் வெளியிட இருக்கிறோம். மற்றபடி பொன்னியின் செல்வனுக்கும், காஃபி வித் காதல் படத்தின் தாமதத்திற்கும் சம்பந்தம் இல்லை.” என தெரிவித்தார். 

Supply : WWW.TAMILFUNZONE.COM

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,596FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles