Crime: கள்ளக்காதலை கண்டித்த மனைவி…. கணவர் தூக்கிட்டு தற்கொலை..!

சேலம் மாவட்டம் கோரிமேடு ஏடிசி நகர் பகுதியில் தீபக், தீபா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கணவர் கடந்த சில மாதங்களாக வேறொரு பெண்ணுடன் தகாதஉறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனிடையே கணவர் தீபக் கள்ளக் காதலியுடன் கடந்த மூன்று மாதங்களாக வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு மனைவியை பார்ப்பதற்காக தீபக் வீட்டிற்கு மதுபோதையில் வந்துள்ளார். அப்போது கள்ளகாதலியை விட்டுவிட்டு தன்னுடன் ஒழுக்கமாக வாழ வேண்டும் என்று மனைவி கண்டித்ததாக கூறப்படுகிறது. பின்னர் தீபா உறங்க சென்றபோது கணவர் வீட்டிற்குள் தன்அணிந்திருந்த வேஷ்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். காலை எழுந்து மனைவி பார்த்தபோது கணவர் தூக்கில் சடலமாக தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதுதொடர்பாக அழகாபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர். தற்கொலை தொடர்பாக மனைவி தீபா மற்றும் உறவினர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

<sturdy>மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.</sturdy>

<sturdy>சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,</sturdy>

<sturdy>எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,</sturdy>

<sturdy>சென்னை – 600 028.</sturdy>

<sturdy>தொலைபேசி எண் – (+91 44 2464 0050, +91 44 2464 0060)</sturdy>

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,596FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles