ஜஸ்டின் ட்ரூடோவுக்குதான் ஸ்கெட்ச்! தாயை கொன்ற பிரபல நடிகர் வாக்குமூலம் ! ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!

தாயை கொன்ற பிரபல கனேடியன் நடிகர் ரியான் கிரந்தமிற்கு , நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

"ரிவர்டேல்", "டைரி ஆஃப் எ விம்பி கிட்" மற்றும் "சூப்பர்நேச்சுரல்" உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரியான் கிரந்தம். கனடாவை சேர்ந்த இவருக்கு வயது 24. தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் , பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஸ்குவாமிஷில் உள்ள அவர்களின் வீட்டில் ரியான் கிரந்தமின் தாய்  பார்பரா வெய்ட் (Barbara Waite) பியானோ வாசித்து கொண்டிருந்த நேரத்தில் , பின்னால் இருந்து சற்றும் எதிர்பாராத வகையில் அவரின் தலையை குறி வைத்து  ரியான் கிரந்தம் துப்பாக்கியால் சுட சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.கொலை நடந்த சிறிது நேரத்திலேயே கிரந்தம் ஒரு GoPro வீடியோவை எடுத்தார், அதில் அவர் தனது தாயைக் கொன்றதை ஒப்புக்கொண்டு அவரது உடலைக் காட்டினார்.

உடனடியாக காவல்துறையில் சரணடைந்தவரிடம் ,புல்லெட்ஸ் நிரப்பப்பட்ட 3 துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் மொலோடோவ் காக்டெய்ல் நிரம்பிய கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரிடம் ஒட்டவாவில் பிரதமர் தங்கியிருக்கும் வீட்டிற்கு செல்வதற்கான மேப்பும் கண்டிபிடிக்கப்பட்டது. இந்த கொலை மற்றும் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் குறித்து நடிகர் ரியான் கூறும் பொழுது , தனது கொலை திட்டம் தாய்க்கானது அல்ல என்றும் அது பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை கொல்வதற்காக செய்யப்பட்ட ஏற்பாடுகள் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் யன்ஸ் கேட் பாலத்தில் வெகுஜன துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டும் என திட்டமிட்டு கிளம்பும் பொழுதுதான் தனது மனதை மாற்றிக்கொண்டு காவல்நிலையத்தில் சரணடைந்ததாக கூறியுள்ளார்.

தாயை கொன்ற பிறகு அவரது உடலை ஷூட்டால் சுற்றி , அதனை சுற்றி மெழுகு வர்த்திகளை ஏற்றி வைத்திருக்கிறார் ரியான். தாயை கொன்ற காரணம் குறித்து ரியான் கூறிய பொழுது “ தாம் எடுத்துக்கொண்ட கமிட்மெண்ட்டிற்காக, தான் வன்முறையை தேர்வு செய்துவிட்டேன். அதனை அறிந்தால் என் தாய் மிகவும் வேதனைப்படுவார், பல சித்திரவதைகளுக்கு ஆளாவார்.அதனை தவிர்ப்பதற்காகத்தான் அவரை கொலை செய்தேன் என தெரிவித்துள்ளார்.  ரியான் கிரந்தம் குறித்து பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் பல நாட்களாக தீவிர மன அழுத்தம், தற்கொலை எண்ணம் , மனச்சோர்வு உள்ளிட்ட பல்வேறு மூளை தொடர்பான பிரச்சனைகளில் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

பிரிட்டிஷ் கொலம்பியா உச்ச நீதிமன்ற நீதிபதி கேத்லீன் கெர் இந்த வழக்கில் ரியான் கிரந்தமிற்கு 14 ஆண்டுகள் பரோல் தகுதியின்றி ஆயுள் தண்டனை விதித்துள்ளார், இந்த கொலை மிகவும் அதிர்ச்சியானது, இதயத்தை நொறுக்கக்கூடியது என கூறிய நீதிபது , கடவுளின் கருணையால்  ரியான் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தாமல் காவல்நிலையம் சென்றார் என நீதிபதி தெரிவித்துள்ளார். 9 வயதில் குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா கெரியரை துவங்கிய ரியான் “iZombie,” “Unspeakable,” “Manner of the Depraved,” “Riese” மற்றும் “The Imaginarium of Physician Parnassus.” உள்ளிட்ட படங்களில் நடித்தார். அந்த படங்கள் அவருக்கு நன்மதிப்பை பெற்று தந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,598FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles