நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகேயுள்ள கீழபாப்பாக்குடி பகுதியை சேர்ந்த ராமர் என்பவர் மகள்கள் சங்கீதா (வயது 19), வைஷ்ணவி (19), சகோதரிகளான இவர்கள் இருவரும் நெல்லை பழைய பேட்டையில் உள்ள அரசு பெண்கள் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கல்லூரிக்கு சென்றுவிட்டு அவர்களது பைக்கில் வீடு திரும்புவது வழக்கம், அதன்படி கல்லூரியை முடித்துவிட்டு மாலை வீடு திரும்பியுள்ளனர். அப்போது முக்கூடல் அருகேயுள்ள ஆலங்குளம் சாலையிலுள்ள தனியார் மில் அருகே வந்த போது, எதிரே மில்லுக்கு வந்த லாரி, வலதுபுறமாக திரும்பியுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக பைக் மீது டாரஸ் லாரி மோதியுள்ளது.

இதில் லாரியின் பின்புற டயர் ஏறி மாணவி சங்கீதா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே, அவரது தங்கை கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் வைஷ்ணவிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சம்பவத்தில் இருந்த பொதுமக்கள் விபத்து குறித்து முக்கூடல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர், அதன்பேரில் விரைந்து வந்த முக்கூடல் போலீசார் சங்கீதா உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்றொரு ஆம்புலன்ஸ் மூலமாக காயமடைந்த வைஷ்ணவியையும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து இந்த விபத்து தொடர்பாக, முக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுனர் நவநீத கிருஷ்ணனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தகவலறிந்து வந்த பெற்றோர் கதறி அழுத காட்சி காண்போரை கலங்கச் செய்தது.

<robust>மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google Information -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்</robust>

<robust>ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்</robust>

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண