Love Horoscope In the present day: Each day Love Horoscope In the present day In Tamil September twenty seventh 2022 Love Relationship Predictions

இலக்கணம் இல்லாத காதலில் அடிப்படையான  ஒன்று, புரிதல். காதலுக்கு கண் இல்லை, சூடு  இல்லை, சொரணை இல்லைனு சொன்னாலும் புரிதல் இல்லாத பிரியம் காதலாக பரிணமிக்கவே முடியாது. மாறாக அது ஆதிக்கத்துக்கு தான் வழி வகுக்கும். அந்த புரிதல் ரொம்பவே ஸ்டாராங் ஆகனும்னா பாட்னர்கூட செய்யவேண்டியது அவங்களுக்காக நேரம் ஒதுக்கி அத முழுமையா பயன்படுத்தறது தான். 

எங்கோ ஒரு இடத்துல சின்னதா விரிசலோ விலகலோ வரும்போது, செய்ய வேண்டியது, கொஞ்சமா அந்த பிரச்சினையை ஆறப்போட்டுட்டு, எவ்வளவு சீக்கிரமே போய் அவங்கிட்ட பேச முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போய் பேசுங்க. அதுதான்  காதலில் புரிதலை ஏற்படுத்தும். எப்பவும் நான் இருக்கேன்னு உங்க பாட்னருக்கு உணர்த்த முடியும். அதவிட்டுட்டு ஏற்பட்ட விலகல்ல நீங்களா உங்க காதலை சோதிக்கிற மாதிரி கேள்விகளை மனசுல யோசுச்சு, அதுக்கான பதிலை நீங்களே எழுதாம இருங்க. அது ரொம்பவே முக்கியம். அப்படி உங்க மனசுக்குள்ள எந்தவிதமான சங்கடமும் ஏற்பட கூடாதுனு தான் நாங்க உங்க லவ்வுக்கு ஹெல்ப் செய்ய ஜாலியான லவ் ராசிபலன்களை கொடுக்கிறோம். நீங்க ஜாலியா படிங்க…

மேஷம்

பத்தல பத்தல சாங் மாதிரி லவ்வுல பிரச்சனை பத்தல பத்தலனு நீங்களே நெறய பிரச்சினையை வாங்கி தலமேல போட்டுக்குவீங்க. அந்த அளவுக்கு உங்க லவ்வுக்கு நீங்களே எதிரியா இருப்பீங்க. 

ரிஷபம்

ரிஸ்க் எடுக்கறது எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்படற மாதிரினு தைரியமான ஆள இருக்கற நீங்க தான், உங்க லவ்வ வீட்டுல சொல்ல பயமா இருக்குனு சொன்னா எப்படி எல்லாரும் உங்கள பாத்து சிரிப்பாங்களோ அந்த மாதிரி உங்க லவ்வர் உங்கள பாத்து சிரி சிரினு சிரிக்க போறாங்க. பாவங்கள் நிறந்த நாள். 

மிதுனம்

சீரியஸான விஷயத்த டேக் இட் ஈஸியா இருக்கற உங்க லவ்வர், டேக் இட் ஈஸியான விஷயத்த ரொம்பவே சீரியஸா எடுத்துட்டு உங்கள மண்ட காய வெக்கறதுக்கு நெறயவே சான்ஸஸ் இருக்கு. சே பாத்து பேசுங்க. 

கடகம்

லவ்வுல நீங்க நெக்ஸ்ட் லெவலுக்கு போறதுக்கான பிரகாசமான நாள் இன்னைக்கு. எல்லாருமே ஆச்சரியப்படுற அளவுக்கு உங்க லவ்ல சர்ப்ரைஸ் அதிகமா நடக்கும். 

சிம்மம்

உங்க லவ்வருக்கும் உங்களுக்கும் பத்து பொருத்தமும் பக்காவா இருந்தாலும் உங்களுக்கும் லவ்வுக்கும் ஏழு ஜென்ம பகை மாதிரி நீங்க ஏதோ ட்ரை பண்ண அது சொதப்பல்ல முடியும். சீக்கிரமே கல்யாணம் செஞ்சுக்கலாமானு கூட முடிவு எடுக்க வாய்ப்புகள் இருக்கு. யோசிங்க லவ் மோட்டர் இஸ் அ லஃப் மேட்டர். 

கன்னி

உங்க ராசி பேருக்கு ஏத்த மாதிரி உங்க லவ்வுல பெரிய பாறாங்கல்லா தூக்கிபோட கன்னி வெச்சுட்டு கூடவே சுத்தீட்டு இருக்கறவங்கள இன்னைக்கு நீங்க கண்டுபுடுச்சுட வாய்ப்பு உண்டு. இதனால உங்களுக்கும் உங்க லவ்வருக்கும் நெருக்கம் அதிகம் ஆகலாம். 

துலாம்

லவ்வுல மூழ்கி திளைக்கும் நாள். செம ரொமான்டிக்கான நாள். உங்க லவ்வருக்குள்ள இவ்வளவு லவ் அண்ட் ரொமாண்ஸ் இருக்கானு உங்களுக்கு இன்னைக்கு தெரியும். காத்திருங்கள். 

விருச்சிகம்

எவ்வளவு பேசுனாலும் கூடவே இருந்தாலும் உங்க லவ்வர மிஸ் பண்ற ஃபீல் இருக்கும். வெளிய ஒரு ட்ரிப் போய்ட்டு வரலாம்னு கூட உங்களுக்கு தோனும். ஆனால் அது முடியாது. கொஞ்சம் ஏக்கமும் ஏமாற்றமும் நிறைந்த நாள்

தனுசு

கண்டம்விட்டு கண்டம் தாண்டி லவ்வுக்காக போற தமிழ் சினிமாவ பாத்துட்டு கெட்டுப்போன உங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாது. நல்லா சுத்துங்க. கடைசி வரைக்கும் உங்களுக்கு ரொம்பவே கிட்ட இருக்கிற லவ்வ புருஞ்சுக்காமலோ போய்விட வாய்புகள் இருக்கு. 

மகரம்

ஸ்கூல் லவ் ஸ்டோரி படத்த பாத்துட்டு உங்க லவ்வர்ட்ட ஸ்கூல் லவ் பத்தி பேசுனா உங்க லவ்வர் எப்படி திட்டுவாங்களோ அப்படி திட்டுவாங்க வாய்ப்புகள் அதிகம். எக்ஸ் பத்தி பேசறேன்னு நீங்க எக்ஸ் ஆகிடாதீங்க. 

கும்பம்

சூப்பரான டே. யுவர் கேட்ஸ் ஆர் ஓபன். ஹைவேல போற பஸ்ஸு மாதிரி ஜம்முனு இருக்க போகுது உங்க லவ்வுல. ஹேப்பி டே ஹேப்பி கப்புல்ஸ். 

மீனம் 

பஸ்ல உக்காரும்போது நல்ல ஜன்னல் சீட்ல உக்காந்துட்டு போலானு முடிவு செஞ்சு உக்காந்துட்டு அப்பாடா இனி ஒரு மணிநேரம் நிம்மதியா ட்ராவல் செய்யலாம்னு நெனச்சுட்டு இருக்கும் போது வெயில் சுளீர்னு அடுச்சா எப்படி இருக்குமோ அப்படி இருக்கபோகுது. நீங்க ஒன்னு நினைக்க அது ஒன்னு நடக்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,599FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles