நீண்ட நாட்களாக ‘ஃபீல்குட்’ படம் இயக்க ஆசைப்பட்டேன் – சுந்தர்.சி | I wished to direct the movie Really feel good for a very long time – Sundar.C

அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் தயாரித்துள்ள படம், ‘காபி வித் காதல்’. சுந்தர்.சி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா உட்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில், சுந்தர்.சி பேசியதாவது:

நீண்ட நாட்களாக ‘ஃபீல்குட்’ படம் இயக்க ஆசைப்பட்டேன். ரசிகர்கள் புன்சிரிப்புடன் படத்தைப் பார்க்க வேண்டும் என நினைத்தேன். ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தை அப்படித்தான் தொடங்கினேன். அதில் முதலில் நக்மா நடிப்பதாக இருந்தது. பின் கதை வேறுவிதமாக மாறிவிட்டது. அடுத்ததாக ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தையும் ‘ஃபீல்குட்’ படமாக எடுக்க நினைத்தேன். சந்தானம் வந்ததும் காமெடியாகிவிட்டது. ‘காபி வித் காதல்’ படத்தில் என் ஆசை நிறைவேறிவிட்டது.

3 வித குணாதிசயம் கொண்ட சகோதரர்கள், அவர்களுக்குள் ஏற்படும் காதல், குடும்ப பிரச்சனையை மையப்படுத்தி இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். இதில் 6 கதாநாயகிகள் நடித்துள்ளனர். இவ்வாறு கூறினார்.

தயாரிப்பாளர் ஏ.சி.சண்முகம் பேசும்போது, ‘‘இந்த படத்தில் பணியாற்றியுள்ள 200 தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்துக்கு என் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெற கார்டு வழங்க இருக்கிறேன். இயக்குநர் சுந்தர்.சி யின் உழைப்பையும் பணியையும் பாராட்டி கவுரவ டாக்டர் பட்டம் வழங்க இருக்கிறோம்’’ என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,596FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles