Tirupati Temple property: அம்மாடியோவ்..! திருப்பதி கோவிலுக்கு எவ்வளவு சொத்து தெரியுமா? ஆச்சரியப்பட வைக்கும் தகவல்கள்…!

இந்தியாவில் ஏன் உலகின் பணக்கார கோவிலான திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை குறித்து கேள்விப்பட்டு நாம் வியந்திருப்போம். ஆனால், திருப்பதி ஏழுமலையான் கோவிலின் சொத்து மதிப்பு குறித்து நாம் என்றேனும் யோசித்ததுண்டா? அப்படி யோசித்திருந்தாலும், நம்மால் கோவிலின் சொத்து மதிப்பினை ஒரு குத்து மதிப்பாகவாவது கணக்கிட முடியுமா? என்பது பெரிய கேள்விக் குறிதான்.

இது குறித்து திருமலை தேவஸ்தானத்துக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள சொத்து மதிப்புகள் பற்றி திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,  திருப்பதி திருமலை தேவஸ்தானத்துக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ரூ.85 ஆயிரத்து 705 கோடி மதிப்புள்ள 960 சொத்துக்கள் உள்ளது. திருமலை தேவஸ்தான அரங்காவலர் குழு கூட்டத்துக்கு பின் தலைவர் சூப்பாரெட்டி பேட்டியளித்துள்ளார். திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்து இன்று வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளனர்.

இவ்வளவு சொத்துக்கள் கோவிலுக்கு சேர திருப்பதி பாலாஜி மீது பக்தர்களுக்கு உள்ள நம்பிக்கைதான். அந்த நம்பிக்கையின் அடிப்படையில், பலரும் பணமாக, நகையாக, பொருளாக, அசையும் மற்றும் அசையா சொத்துக்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். மதம் கடந்தும் இந்த நம்பிக்கையின் வெளிப்பாடு இருப்பதையும் நாம் காண முடிகிறது. சமீபத்தில் கூட சென்னையைச் சேர்ந்த இஸ்லாமிய தம்பதி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 1 கோடியே 2 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை அப்துல் கனி மற்றும் நுபினா பானு ஆகியோர் நன்கொடையாக காசோலையை வழங்கினர். சென்னையைச் சேர்ந்த தம்பதியினர் கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாயகுலா மண்டபத்தில் TTD செயல் அலுவலர் தர்மா ரெட்டியை சந்தித்து காசோலையை வழங்கியுள்ளனர். மொத்தத் தொகையில், 15 லட்சம் ரூபாய் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, இந்த அறக்கட்டளை தினமும் கோவிலுக்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு இலவச உணவு வழங்குகிறது. மீதமுள்ள 87 லட்ச ரூபாயில் ஸ்ரீ பத்மாவதி விருந்தினர் மாளிகையில் சமையலறையில் புதிய மரச்சாமான்கள் மற்றும் பொருட்கள் வாங்க வழங்கப்பட்டுள்ளது.

<robust>பிரம்மோற்சவ விழா</robust>

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 27 ஆம் தேதி பிரம்மோற்சவ விழாவுக்கான கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த விழா அக்டோபர் 5 ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு நடைபெற உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் கடந்த திங்கட்கிழமை மட்டும் பக்தர்கள் 5.71 கோடி ரூபாய் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் அன்றைய தினம் 62,276 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதில், 31,140 பேர் தலைமுடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,871FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles