Indian Telecommunication Invoice 2022: Web Calling Apps Like WhatsApp, Zoom, Skype Could Quickly Want Telecom License In accordance To New Draft Invoice | Indian Telecommunication Invoice: வாட்ஸ்அப், ஸ்கைப், கூகுள் டுவோ செயலிகளுக்கு புதிய கட்டுப்பாடா?

உலகம் முழுவதும் வாட்ஸ் அப், ஸ்கைப், ஸூம், கூகுள் டுவோ உள்ளிட்ட பல்வேறு செயலிகள் மூலம் பலரும் வீடியோ கால் வசதியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலிகளை பலரும்  பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் சூழலில் அந்த செயலிகள் பலர் மத்தியில் பிரபலம் அடைந்து வருகின்றன. இதன்காரணமாக சாதாரணமாக தொலைப்பேசி அழைப்பு பயன்பாடு ஒரு சில நேரங்களில் குறைந்து வருகின்றன.

 

இந்நிலையில் மத்திய அரசு புதிய தொலைத்தொடர்பு வரைவு மசோதாவை வெளியிட்டுள்ளது. அதில் வாட்ஸ் அப், ஸ்கைப், ஸூம், கூகுள் டுவோ உள்ளிட்ட செயலிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது. அதாவது இந்தச் செயலிகள் அனைத்தும் உரிமம் பெற்ற பின்பே இந்தியாவில் இயங்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது. மேலும் இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் தொலைத்தொடர்பு இணைப்புகளை அளிக்க உரிமம் பெற வேண்டியது கட்டாயமாக்கப்படும் என்று மசோதாவில் உள்ளது. 

 

இவைதவிர ஓடிடி செயலிகளையும் தொலைத் தொடர்பு சேவைக்குள் கொண்ட இந்த மசோதா வழி வகை செய்ய உள்ளது. அத்துடன் தற்போது இருக்கும் அலைக்கற்று ஏலம் முறையில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதாவது ஏலம் முறையை முற்றிலும் இந்த மசோதா மாற்றவில்லை. அதற்கு பதிலாக மத்திய அரசு நிர்வாக முறையில் ஏலம் இல்லாமலும் அலைக்கற்றை விற்பனை ஒதுக்கலாம் என்று கூடுதலாக பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. 

 

மேலும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அதிகாரங்கள் சிலவற்றிலும் இந்த மசோதா சில மாற்றங்களை செய்துள்ளது. அத்துடன் தொலைத் தொடர்பு சேவைகள் வழங்கி வரும் நிறுவனங்களுக்கான உரிமம் கட்டணம் மற்றும் நிலுவை தொகை உள்ளிட்ட சிலவற்றை ரத்து செய்வது தொடர்பான பிரிவுகளும் இதில் இடம்பெற்றுள்ளன. 

 

இந்தச் சட்டவரவை மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணோவ் வெளியிட்டார். இந்த வரைவு மசோதா மீது பொதுமக்கள் கருத்து தெரிவிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா தொடர்பான கருத்துகளை மக்கள் வரும் அக்டோபர் மாதம் 20ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

வாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை எடிட் செய்யும் வசதி:

அனுப்பிய மெசேஜ்களை எடிட் செய்யும் வசதியை வாட்ஸ் அப் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. தற்போது நீங்கள் யாருக்கேனும் மெசேஜை அனுப்பிவிட்டால் அது தவறாகும் பட்சத்தில் டெலிட் செய்யலாம். அதனை எடிட் செய்ய முடியாது. அந்த வசதியைத்தான் தற்போது சோதனை செய்து வருகிறது வாட்ஸ் அப். இந்த வசதி அறிமுகமானால் மற்றவருக்கு மெசேஜை அனுப்பிய பிறகுகூட அதனை எடிட் செய்ய முடியும். இப்போது இந்த வசதியை வாட்ஸ் அப் சோதனைமட்டுமே செய்து வருகிறது. இது வெற்றியடைந்தால் பீட்டா வெர்ஷன் பயனர்களுக்கு இந்த வசதி அறிமுகம் செய்யப்படும். பின்னர் அனைவருக்கும் அறிமுகமாகும்.


மேலும் படிக்க: 10,000 ரூபாய்க்குள் டாப் மாடல் டிவி.க்கள்… வாங்குவது எப்படி?

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,871FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles