இதைவிட வேறென்ன நான் கேட்க முடியும்: விஜய், ஷாருக்கானுடன் இருக்கும் படத்தை பகிர்ந்த அட்லி | director shares picture with actor vijay shah rukh khan taken on his birthday

சென்னை: திரைப்பட இயக்குனர் அட்லி, நடிகர்கள் விஜய் மற்றும் ஷாருக்கான் உடன் தான் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போட்டோ அவரது பிறந்த நாளான நேற்று எடுக்கப்பட்டதாக தெரிகிறது. தற்போது ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜாவான் படத்தை அவர் இயக்கி வருகிறார்.

இயக்குனர் ஷங்கரின் உதவியாளராக இருந்து, பின்னர் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கி சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்தவர் அட்லி. இது தவிர சினிமா பட தயாரிப்பிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.

தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவரான விஜய் உடன் மூன்று படங்களில் அட்லி பணியாற்றியுள்ளார். இப்போது ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் ஜாவான் படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் நேற்று தனது 36-வது பிறந்தநாளை அவர் கொண்டாடி இருந்தார்.

ரசிகர்கள் பலரும் அவருக்கு சமூக வலைதளங்களின் வழியே வாழ்த்து சொல்லி இருந்தனர். இந்நிலையில், நடிகர்கள் விஜய் மற்றும் ஷாருக்கான் உடன் தான் இருக்கும் படத்தை அவர் பகிர்ந்துள்ளார். இந்த சந்திப்பு அவரது பிறந்தநாளான நேற்று நடந்துள்ளதாக தெரிகிறது.

“பிறந்த நாள் அன்று இதைவிட வேறென்ன நான் கேட்டுவிட முடியும். அன்பான ஷாருக்கான் சார் மற்றும் என்னோட அண்ணன், என்னோட தளபதி விஜய்” என அந்த படத்திற்கு கேப்ஷன் கொடுத்துள்ளார் அட்லி. அதில் மூவரும் கருப்பு நிற ஆடையில் மாஸாக காட்சி அளிக்கின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,505FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles